மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் நாக் கமிட்டி ஆய்வு துவங்கியது. இக்கமிட்டி நாளை வரை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
பல்கலையில் பாடத் திட்டங்கள், மாணவர்களின் கல்வித் தரம், துறைகள் வாரியாக மாணவர்கள் சேர்க்கை, பேராசிரியர்களின் தகுதி, ஆராய்ச்சிகள் மற்றும் பப்ளிகேஷன்கள் குறித்து ஆய்வு செய்யும். பல்கலை வளர்ச்சி பணிக்காக அரசு, அரசுசாரா அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட நிதி ஆதாரங்கள் குறித்தும் ஆய்வு செய்யவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் குழு செய்து வருகிறது.