உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க அனுமதி 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2021
04:46

புதுச்சேரி- அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் அளிக்க கவர்னர் தமிழிசை அனுமதி அளித்துள்ளார்.கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், தலைமை செயலாளர் மற்றும் ஆலோசகர்களுடன், அரசு உதவி பெறும் பள்ளி களுக்கு வழங்கும் நிதியுதவி குறித்து ஆலோசனை நடத்தினார். புதுச்சேரியில் பள்ளி கல்வி சட்டம், விதிகளை ஆராய குழு அமைத்துள்ளதாக கூறினர்.அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் கடந்த 14 மாதங்களாக வழங்கவில்லை. அதற்கு விரைவில் தீர்வு ஏற்படுத்துவதற்கான குழுவின் வரைவு அறிக்கை கவர்னர் ஆணைப்படி சமர்ப்பிக்கப்பட்டது.நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள ஒரு திட்டத்தை வரையறைப்படி உதவிபெறும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க கவர்னர் அனுமதி அளித்தார்.அரசு உதவி பெறும் பள்ளி சிறப்பாகவும், பொறுப்புணர்வுடன் செயல்பட குழுவின் வரைவு அறிக்கையில் தேவையான சட்டதிருத்தங்களை கொண்டு வரவும், மறு ஆய்வு செய்யவும் அனுமதி அளித்துள்ளார். தேர்தல் முடிந்தவுடன், இந்த குழுவின் அறிக்கை அரசின் இறுதி முடிவுக்கு சமர்ப்பிக்கப்படும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X