பண வரம்பை மறுபரிசீலனை செய்ய வர்த்தகர்கள் வலியுறுத்தல் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
பண வரம்பை மறுபரிசீலனை செய்ய வர்த்தகர்கள் வலியுறுத்தல்
Added : மார் 06, 2021 | |
Advertisement
 

திண்டுக்கல் : 'வணிகர்கள், பொதுமக்கள் கொண்டு செல்லும் பணத்தின் வரம்பை அதிகரிக்க வேண்டும்' என தேர்தல் ஆணையத்திடம், திண்டுக்கல் தொழில் வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து மாவட்ட தலைவர் கிருபாகரன் கூறியது: தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் ரூ.50 ஆயிரம் வரை எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வணிகம் செய்ய கொண்டு செல்லும் ரூ.1 லட்சம், ரூ.80 ஆயிரத்திற்கு கூட தேர்தல் அதிகாரிகள் கணக்கு கேட்கின்றனர். இதே போல் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் போதும் ரசீது கேட்கின்றனர். ஆவணம் இல்லாதபட்சத்தில் பறிமுதல் செய்கின்றனர். எனவே தான் பணம் எடுத்துச் செல்ல வரம்பு தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்த கோரிக்கை வைத்தோம்.

வர்த்தகர்கள், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கை மீது தேர்தல் ஆணையம் மறு பரிசீலனை செய்ய வேண்டும், என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X