திண்டுக்கல்லில் 35 இடங்களில் பெண்களுக்கான ஓட்டுச்சாவடிகள் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
திண்டுக்கல்லில் 35 இடங்களில் பெண்களுக்கான ஓட்டுச்சாவடிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 மார்
2021
04:51

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பெண் வாக்காளர்களுக்காக பெண்கள் மட்டுமே பணி புரியும் 35 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.



கொரோனாவால் சமூக இடைவெளியை பின்பற்றி ஓட்டளிக்கும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 1050 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி வீதம் பிரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 600 ஓட்டுச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது. கடந்த தேர்தல்களை போல், வரும் தேர்தலிலும் பெண் வாக்காளர்களுக்காக 7 சட்டசபை தொகுதிகளில் தலா 5 வீதம் மொத்தம் 35 இடங்களில் தனியே ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.அதில் முழுவதும் தேர்தல் அதிகாரி, அலுவலர்கள், போலீசார் உட்பட அனைவரும் பெண்களே பணியில் இருப்பர். பெண் வாக்காளர்கள் மட்டுமே இங்கு ஓட்டளிப்பர். வாக்காளர்களை கவர ஏப்.6ம் தேதி ஓட்டுப்பதிவு நாளில் ஓட்டுச்சாவடிகளில் கோலமிட்டு, தோரணம் கட்டி வீடுகளை போல் அலங்கரிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X