தடுப்பூசி செலுத்தினாலும் முகக்கவசம் அணிவது அவசியம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
தடுப்பூசி செலுத்தினாலும் முகக்கவசம் அணிவது அவசியம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 மார்
2021
04:53

திண்டுக்கல் : 'கொரோனா தடுப்பூசி செலுத்தினாலும் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்'என, திண்டுக்கல் அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜன.16 முதல் சுகாதாரம், முன் களப் பணியாளர்கள் தொடங்கிகடந்த மார்ச் 1 ம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், வயது 45- 60 க்கு உட்பட்ட நீண்ட நாட்களாக மருத்துவச் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு தற்போது செலுத்தப்படுகிறது. இதுவரை 9500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மூலமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



இது குறித்து அவர்கள் கூறுகையில்,' கொரோனாவில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. தடுப்பூசி செலுத்தினாலும் விதிமுறைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை. பயப்பட தேவையில்லை', என்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X