ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல்லில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜாக்கிளி தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். இணைச்செயலர்கள் அங்குச்சாமி, அருணாசலநாதன், மாநில துணை தலைவர் அய்யாக் கண்ணு, அமைப்புச் செயலர் ஹாஜா மைதீன் முன்னிலை வகித்தனர்.'9-11ம் வகுப்பு வரை ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டதால் சனிக் கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஓட்டளிக்க சிறப்பு ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்க வேண்டும். கர்ப்பிணிகள், 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
ஓட்டுச்சாவடியில் தங்குவதற்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்' ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் கிருஷ்ணதாஸ் நன்றி கூறினார்.