துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பு | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 மார்
2021
04:54

சின்னாளபட்டி : சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சின்னாளபட்டியில் துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பு நடந்தது.


ஆத்துார் தொகுதி 1977- 2016 வரை, 14 தேர்தல்களை சந்தித்துள்ளது. தற்போது, ஆண் வாக்காளர்கள் 1,35,907, பெண் வாக்காளர்கள் 1,45,907, இதரர் 22 பேர் மொத்தம் 2,81,836 பேர் உள்ளனர். தேர்தலை முன்னிட்டு, மக்கள் மத்தியில் எவ்வித அச்சமின்றி, அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் என்ற உணர்வை ஏற்படுத்த துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி., சந்திரன் தலைமை வகித்தார். கூடுதல் டி.எஸ்.பி., சுகுமார் முன்னிலை வகித்தார். சின்னாளப்பட்டி பஸ் ஸ்டாண்டில் துவங்கி பூஞ்சோலை, போலீஸ் ஸ்டேஷன், மேட்டுப்பட்டி, கீழக் கோட்டை பகுதியில் அணி வகுப்பு நிறைவடைந்தது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X