கொடைக்கானல், : கொடைக்கானல் மலைப்பகுதியில் சில்லரை மது விற்பனை ஜோராக நடக்கும் நிலையில் தேர்தலால் ஆளும் கட்சியினர் அடக்கி வாசிக்க உத்தரவிட்டுள்ளனர்.
கொடைக்கானல் நகர், பூம்பாறை, மன்னவனுார், மேல்மலை உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சரின் ஆசியில் சில்லரை மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.போலீசார் மற்றும் ஆளும் ஒன்றிய செயலருகு மாதந்தோறும் கவனிப்புகள் வந்து குவிகின்றன. சட்டசபை தேர்தலால் இந்நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி பெண்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும் என ஆளும் தரப்பு மூலம் உத்தரவுகள் பறந்துள்ளன.போலீசாரும் தேர்தல் நேரத்தில் சில்லரை மது விற்பனை நடந்தால் நடவடிக்கை பாய்ந்து விடும் என்ற அச்சத்தில் இதில் ஈடுபடுவோர்களை அறிவறுத்தி தற்காலிகமாக நிறுத்த கோரியுள்ளனர்.
மது பாட்டிலுக்கு கூடுதலாக சம்பாதித்த ஆளும்கட்சியினர் வருமானத்திற்கு வழியில்லாத நிலையில் தங்கள் வேலையை மறைமுகமாக தொடரத் தான் செய்கின்றனர். சட்ட விரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.