2000 ஆண்டுகளுக்கு முன்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2021
04:56

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே கொங்கபட்டியில் கிடைத்த தமிழி(பிராமி) கல்வெட்டு 2000 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்தவரின் நினைவாக வைக்கப்பட்ட கல்வெட்டாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.



இக்கிராமத்தில் இருந்த தொம்பரை கல்லில் தமிழ் கல்வெட்டுக்கள் சில மாதங்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டன. மதுரை- - தேனி ரோடு அகலப்படுத்தும் பணியின் போது இந்த கல்லை வேறு இடத்திற்கு மாற்றியபோது எழுத்துக்களாக இருப்பதை பார்த்து ஆசிரியை மயில்மீனா தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தார். மூன்று வரிகள் இருந்த தனிக்கல்லின் ஆரம்பப்பகுதி சிதைந்த நிலையில் இருந்தது.



நேற்று கல்வெட்டு ஆய்வாளர் வேதாசலம், காந்திராஜன் குழுவினர் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது: 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இறந்த குறுநில தலைவர் நினைவாக எடுக்கப்பட்ட கல்வெட்டாக இருக்க வாய்ப்புள்ளது. முற்பகுதி சிதைந்த நிலையில், இந்த கல்லை இட்டவர் பேரார் பத்தன் பராபன்/பரபன் தத்தந்தை என்பவர் இளங்கண்ணன் நினைவாக எழுப்பித்த நடுகல்லாக இருக்கலாம் என்றார்.புள்ளிமான்கோம்பை, கிண்ணிமங்கலம், தாதபட்டி பகுதியில் தனிக்கல்லில் கிடைத்த கல்வெட்டை கொங்கபட்டியில் கிடைத்த கல்வெட்டு ஒத்துள்ளது.



மதுரை - கொச்சி வரையிலான பாண்டிய நாட்டுக்கும், சேர நாட்டுக்கும் இடையிலான பெருவணிகப்பாதையில் இவை கிடைத்துள்ளன. மலைப்பகுதிகளில் தமிழி கல்வெட்டுக்கள் கிடைத்து வந்த நிலையில் தற்போது சாமானியர்கள் வாழ்ந்த பகுதிகளிலும் கிடைத்து வருவது இப்பகுதியின் தொன்மையான வரலாற்றை கட்டமைக்க முக்கிய ஆவணங்களாக உள்ளன. இதனால் இந்தபகுதியை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X