சின்னமனுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லை இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2021
05:06

சின்னமனுார் : பரந்துவிரிந்த எல்லையைக்கொண்ட சின்னமனுார் போலீஸ் ஸ்டேஷனை இரண்டாக பிரிக்க சட்டசபை தேர்தலுக்குப்பின்னராவது போலீஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு சப்டிவிஷனிலும் குறைந்தது 5 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. ஆனால் போடி சப்டிவிஷனில் போடி தாலுகா, போடி டவுன், தேவாரம், கோம்பை, குரங்கணி, சின்னமனுார், ைஹவேவிஸ் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. சின்னமனுார் நகர் மற்றும் 20 கி.மீ .,சுற்றளவில் எண்ணற்ற கிராமங்கள் இருக்கின்றன. இவற்றில் மார்க்கையன் கோட்டையும், குச்சனுாரும் பேரூராட்சிகளாகும். மாவட்டத்தில் அதிக பரப்பளவு மற்றும் ஊர்களை கொண்ட ஸ்டேஷனாக சின்னமனுார் உள்ளது. இதனால் நகர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்களுக்கு போலீஸ் உதவி உரிய நேரத்தில் கிடைப்பது தாமதமாகிறது.



எனவே சின்னமனுாரை இரண்டாக பிரிக்க போலீஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.போலீஸ் தேவை அதிகம்வி.டி.ஞானசுந்தரம், சமூக ஆர்வலர்சின்னமனுாரை நம்பி 30 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. செப்பேடுகள் கண்ட சின்னமனுார் நகரமும் வளர்ந்து வருகிறது. வர்த்தக நிறுவனங்களும், கடைகளும் பெருகியுள்ளன. மக்கள் தொகை அதிகரித்து விரிவாக்க பகுதிகள் பெருகி வருகிறது. எனவே போலீஸ் தேவையும் அதிகமாக உள்ளது. நகருக்கு மட்டும் சின்னமனுார் ஸ்டேஷன் போதுமானதாகும். சுற்றியுள்ள கிராமங்களை இணைத்து கூடுதலாக ஸ்டேஷன் என அமைத்து, போலீஸ் பாதுகாப்பு, குற்றச்செயல்தடுப்பு, சமூக அமைதிக்கு வழிகாண வேண்டும். சட்டசபை தேர்தல் முடிந்த பின்னராவது போலீஸ் தலைமை இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தேர்தலில் வெற்றி பெறுவோர் அதற்காக குரல் எழுப்ப வேண்டும்.பணிப்பளு குறையும்ஆ. வேலுச்சாமி, ஓய்வு ஆசிரியர் : குச்சனுார் சனீஸ்வரபகவான் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இங்கு போலீஸ் அவுட்போஸ்ட் இதுவரை அமைக்கவில்லை. சின்னமனுார் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் எண்ணற்ற கிராமங்களும், 50 கி.மீ., துாரத்தில் உள்ள மேகமலை மலைக்கிராமங்களும் உள்ளன. கம்பம்,கூடலுார், போடி, தேனி, பெரியகுளம் போன்று சின்னமனுாருக்கு டவுன், தாலுகா என இரண்டு ஸ்டேஷன்கள் ஏற்படுத்த வேண்டும். போலீசாருக்கும் பணிப்பளு குறையும். பொதுமக்களுக்கும் போலீஸ் சேவை எளிதாக கிடைக்கும். போலீஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X