கூடலுார் : கலசலிங்கம் வேளாண் கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவர்கள் மனோஜ், ஜெயகவுதம், மாரிசெல்வம், ஜோன்ஸ் சாமுவேல், ராஜா கோபால், விஜயராஜ், அருண்குமார், ஹரிஷ் மல்லயா, சுதர்சன், ராமசுப்ரமணி ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கம்பம் பள்ளத்தாக்கில் தங்கியுள்ளனர்.
கருநாக்கமுத்தன்பட்டி நெல் வயல்களில் நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக சுற்றியுள்ள கரைகளில் பயறு செடிகளை நடவும், உயிர் உரங்கள் மூலம் விதை நேர்த்தி செய்து நடுவது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினர். தொடர்ந்து கதிர்விடும் பருவத்தில் வயல்களில் எலித் தொந்தரவைத் தடுக்க மரக்குச்சியால் ஆன கிட்டி அமைப்பது குறித்தும் அதை வயல்களில் வைக்கும் முறை குறித்தும் மாணவர்களுக்கு விவசாயிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.