கம்பம் : கம்பம் பகுதியில் கஞ்சா வழக்குகளில் கைதான 10 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது.
கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை தடுக்க முடியாமல் உள்ளது. கைது செய்யப்படுவோர் ஜாமினில் வந்து மீண்டும் அதில் ஈடுபடுகின்றனர். எனவே அவர்களை முடக்க சமீபத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தை போலீசார் கையில் எடுத்துள்ளனர். கம்பத்தில் ஜன. 19 ல் 52 கிலோ கஞ்சாவுடன் செல்வக்குமார் 30, கண்ணன் 44, கணேசன் 29, பார்த்திபன் 24, தனுஷ்கோடி 35, தினேஷ்குமார் 22 ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.ஜன. 20 ல் ராயப்பன்பட்டியில் 32 கிலோ கஞ்சாவுடன் மாதேஷ் 25, நவீன்குமார் 35, ராதேஷ் 27, ஜெகதீசன் 29 ,ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தேனி சாய்சரண்தேஜஸ்வி, எஸ்.பி., கலெக்டர் கிருஷ்ண னுண்ணிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவில் 10 பேர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது. அந்த உத்தரவின் நகலை கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.