காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதி 'பிளாஷ் பேக்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2021
05:14

காட்டுமன்னார்கோவில்- காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வன்னியர்கள், ஆதிதிராவிடர்களுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள், முதலியார், பிள்ளைமார் அதிகளவில் உள்ளனர். இத்தொகுதி 1962 முதல் துவங்கப்பட்டது. முதல் தேர்தலில் பொது தொகுதியாக இருந்தது. அதன்பிறகு தனித்தொகுதியானது. தொகுதியில் இதுவரை தி.மு.க., 6 முறை, அ.தி.மு.க., 3, காங்., 2, வி.சி., 1, சுயேச்சை ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.தொகுதியில் 1962 முதல் 2016ம் ஆண்டு வரை வெற்றி பெற்றவர்கள் விபரம்:1962ல் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட முட்டம் கிருஷ்ணமூர்த்தி 27,706 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்த இ.காங்., வாகிசம் பிள்ளை 27,599 ஓட்டுகள் பெற்றார். 1967ல் இ.காங்., சிவசுப்ரமணியன், 30,521 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்த தி.மு.க., கோவிந்தராசு, 30,387 ஓட்டுகள் பெற்றார். 1971ல் தி.மு.க., பெருமாள் 32,847 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்த நிறுவன காங்., (என்.சி.ஓ.,) குப்புசாமி 29,551 ஓட்டுகள் பெற்றார்.1977ல் தி.மு.க., ராமலிங்கம், 26,038 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்த அ.தி.மு.க., ராஜன் 19,991 ஓட்டுகள் பெற்றார். 1980ல் தி.மு.க., ராமலிங்கம் 44,012 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்த மா.கம்யூ., மகாலிங்கம், 29,350 ஓட்டுகள் பெற்றார். 1984ல் அ.தி.மு.க., கூட்டணியில் காங்., ஜெயச்சந்திரன், 42,928 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்த தி.மு.க., தங்கசுவாமி 41,796 ஓட்டுகள் பெற்றார். 1989ல் சுயேச்சை தங்கராசு 30,877 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்த தி.மு.க., ராமலிங்கம், 27,036 ஓட்டுகள் பெற்றார்.1991ல் அ.தி.மு.க., ராஜேந்திரன் 48,103 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்த பா.ம.க., வெற்றிவீரன் 21,785 ஓட்டுகள் பெற்றார். 1996ல் தி.மு.க., ராமலிங்கம் 46,978 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்த இந்திய மனித உரிமைக் கட்சி (எச்.ஆர்.பி.ஐ.,) இளையபெருமாள் 37,159 ஓட்டுகள் பெற்றார்.2001ல் ப.சிதம்பரம் அணி சார்பில் போட்டியிட்ட வள்ளல்பெருமான் தி.மு.க., சின்னத்தில் நின்று 55,444 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க., கூட்டணியில் காங்., சச்சிதானந்தம், 38,927 ஓட்டுகள் பெற்றார்.2006ல் அ.தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சி ரவிக்குமார் 57,244 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., கூட்டணியில் காங்., வள்ளல்பெருமான், 43,830 ஓட்டுகள் பெற்றார். 2011ல் அ.தி.மு.க., முருகுமாறன் 83,665 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்த வி.சி., ரவிக்குமார் 51,940 ஓட்டுகள் பெற்றார். 2016ல் அ.தி.மு.க., முருகுமாறன் 48,450 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்த மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட வி.சி., திருமாவளவன் 48,363 ஓட்டுகள் பெற்றார். தி.மு.க., கூட்டணியில் காங்., சார்பில் போட்டியிட்ட மணிரத்தினம், 37,346, தனித்து போட்டியிட்ட பா.ம.க., அன்புசோழன், 25,890, நாம் தமிழர் கட்சி ஜெயஸ்ரீ 1,055, பா.ஜ., சரவணன் 822, பகுஜன் சமாஜ் கலைவாணன் 380 ஓட்டுகள் பெற்றனர்.இத்தேர்தலில், அ.தி.மு.க., 29.33 சதவீதம், வி.சி., 29.28, தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட காங்., 22.61, பா.ம.க., 15.67 சதவீத ஓட்டுகளும் பெற்றன.தற்போது இத்தொகுதியில், ஆண் வாக்காளர்கள் 1,14,202, பெண் வாக்காளர்கள் 1,14,503, மூன்றாம் பாலினத்தவர் 16 என மொத்தம் 2,28,721 வாக்காளர்கள் ஓட்டளிக்க தயார் நிலையில் உள்ளனர்.கூட்டணிகளுக்குள் கடும் போட்டிஅ.தி.மு.க., கூட்டணியில் 2016ல் தனித்து போட்டியிட்ட பா.ம.க., தே.மு.தி.க., மற்றும் பா.ஜ., கட்சிகள் இணைந்திருப்பது தொகுதியில் அவர்களுக்கு கூடுதல் பலத்தைத் தரும். அதே சமயம் தி.மு.க., கூட்டணியில் வி.சி., காங்., ம.தி.மு.க., கட்சிகள் உள்ளதால் தொகுதியில் அவர்களின் பலமும் குறையாது.இத்தொகுதியில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., நேரடி மோதலுக்கு தயாராகி வரும் நிலையில், தி.மு.க., கூட்டணியில் உள்ள வி.சி., மற்றும் காங்., கட்சிகளும் போட்டியிட தயாராகி வருகின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ம.க., வும் இத்தொகுதி மீது கண் வைத்துள்ளது. இதனால், தொகுதியில் யார் போட்டியிடுவது என கூட்டணி கட்சிக்குள்ளேயே கடும் போட்டி நிலவுகிறது.கூட்டணி உறுதியானால் தான் தொகுதி எந்தெந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்பது தெரிய வரும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X