மூணாறு : கேரளாவில் ஏப். 6 ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ல் துவங்குகிறது.
அதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேர்தல் கமிஷன் வாய்ப்பு அளித்துள்ளது. 18 வயது நிறைவடைந்தோர் இ-சேவை மையங்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதேபோல் மார்ச் 26 முதல் தபால் ஓட்டுக்கான விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது. 80 வயதை கடந்தவர், மாற்றுத்திறனாளி, கொரோனா பாதித்து கண்காணிப்பில் உள்ளவர், அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஆகியோர் தபால் ஓட்டுகள் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.----