திட்டக்குடி- திட்டக்குடி (தனி) தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற அ.தி.மு.க., - தி.மு.க., - த.மா.கா., கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.திட்டக்குடி (தனி) தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அ.தி.மு.க.,வில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பெரியசாமி, ராமு, தமிழழகன். த.மா.கா.,வில் புரட்சிமணி, தி.மு.க.,வில் தற்போதைய எம்.எல்.ஏ., கணேசன், அ.தி.மு.க.,வில் 1977ல் வெற்றி பெற்ற பெரியசாமி, 2001ல் உளுந்துார்பேட்டை தொகுதியில் வென்ற ராமு, 2011ல் திட்டக்குடியில் தே.மு.தி.க.,வில் வென்று, அதிருப்தி எம்.எல்.ஏ.,வாக மாறி அ.தி.மு.க.,வில் இணைந்த தமிழழகன் ஆகியோர் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர்.