கடலுார் - கடலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூ்டடம் நடந்தது.தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீஸ்வரன் தலைமை தாங்கினார். சிறப்பு துணை ஆட்சியர் ஜெயராஜ பவுலின், தாசில்தார் பலராமன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ரவி, மண்டல அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், ஓட்டுச்சாவடி மையங்களுக்குச் சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் ஓட்டளிக்கும் முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.தொடர்ந்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான கூட்டத்தில் ஓட்டுச்சாவடி மையங்களுக்கு சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் தபால் ஓட்டளிக்க விருப்பமுள்ள 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளின் விபர பட்டியலை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், அதிகாரிகளிடம் வழங்கினர்.