கூடலுார் : இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி மதம் பார்த்து வருவதில்லை மனிதநேயம்' என்ற தலைப்பில் சமீபத்தில் சென்னையில் நடந்தது.
இதில் கூடலுார் என்.எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் எம்.ஹரிஹரசுதன் ,மாநில அளவில் முதலிடம் பெற்றார். சான்றிதழ், நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இம்மாணவரை பள்ளி தாளாளர் ராம்பா, தலைவர் பொன்குமரன், தலைமை ஆசிரியர் முருகேசன், ஜே.ஆர்.சி.,ஆலோசகர் செல்வன், ஓவிய ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.