அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு; எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் | நாமக்கல் செய்திகள் | Dinamalar
அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு; எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 மார்
2021
10:06

மல்லசமுத்திரம்: அரசமரம் காலனியில், அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்து, குடியிருப்புகளில் கறுப்பு கொடி கட்டி, தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மல்லசமுத்திரம் ஒன்றியம், பள்ளக்குழி கிராமம், அரசமரம் காலனி அருந்ததியர் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அரசு புறம்போக்கு நிலம் இப்பகுதியில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த இடத்தை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, சாலையில் செல்வதற்கு இடமில்லாமல் சுவர் எழுப்பியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக சாலை மறியல் செய்தும், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுஅளித்தும் பயனில்லை. இந்நிலையில், அப்பகுதி மக்கள் வரும் தேர்தலை புறக்கணிப்பதாக அனைத்து வீடுகளிலும், கறுப்புக்கொடி கட்டி பேனர் வைத்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். நேற்று காலை, குடியிருப்புகள் அருகே சிறிதுநேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மல்லசமுத்திரம் போலீசார் சமரசம் செய்தனர்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X