பள்ளிபாளையம்: வெப்படை அருகே, டூ வீலர் மோதியதில் பள்ளி மாணவர் இறந்தார். பள்ளிபாளையம் அருகே, வெப்படை அடுத்த செட்டியார் கடை பகுதியை சேர்ந்தவர் குமார், 35; தறி தொழிலாளி. அவரது மகன் சந்தோஷ்குமார், 16 வெப்படை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை சைக்கிளில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த டூ வீலர் மோதியதில், சந்தோஷ்குமார் பலத்த காயம் அடைந்தார். பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.