அரசு பள்ளி அருகே சுகாதார சீர்கேடு | நாமக்கல் செய்திகள் | Dinamalar
அரசு பள்ளி அருகே சுகாதார சீர்கேடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 மார்
2021
10:07

எலச்சிபாளையம்: குமரவேலிபாளையத்தில், அரசு பள்ளி அருகே சாலையில் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எலச்சிபாளையம் ஒன்றியம், குமரவேலிபாளையத்தில், 100க்கும் அதிகமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதி இதுவரை, வடிகால் வசதி ஏற்படுத்தவில்லை. அதனால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அரசு தொடக்கப்பள்ளி அருகே, குளம் போல் தேங்கியுள்ளது. அங்கு, அதிகளவில் கொசு உற்பத்தியாகி, சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை துன்புறுத்தவதால், அவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. வடிகால் வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X