கோவையில் சட்டசபை தேர்தல் பணி வேகம்!இயந்திரங்கள் அனுப்பும் பணி துரிதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

07 மார்
2021
04:24
பதிவு செய்த நாள்
மார் 07,2021 00:11

கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு பிரித்து அனுப்ப, 'ஆன்லைன்' வாயிலான குலுக்கல், கலெக்டர் ராஜாமணி தலைமையில் நேற்று நடந்தது.


அதன்பின், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், ரேஸ்கோர்ஸ் சுகாதாரத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மாவட்டத்தின், 10 சட்டசபை தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணி நேற்று துவங்கியது.மாவட்டத்தில் உள்ள, 4,427 ஓட்டுப்பதிவு மையங்களுக்கு, 5,316 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 5,894 ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் நேற்று முதல், அந்தந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.


இவ்வாறு அனுப்பப்படும் இயந்திரங்கள், அந்தந்த தொகுதியில் இருக்கும் கல்லுாரிகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் காப்பு அறையில் வைக்கப்படும்.வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கி, இறுதி பட்டியல் வெளியிடப்பட்டதும், அனைத்து இயந்திரங்களிலும், 'பேலட் ஷீட்' பொருத்தப்படும்.


பின், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களால் மீண்டும் இரண்டாவது முறை 'ஆன்லைன்' குலுக்கல் நடத்தி, ஓட்டுப்பதிவு மையங்களுக்கு அனுப்பப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X