மரம் வெட்டியவருக்கு தண்டனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2021
00:13

வடவள்ளி:வடவள்ளியில், அனுமதியின்றி மரத்தை வெட்டியவருக்கு, வருவாய்த்துறை அபராதம் விதித்தது. மரத்துக்கான மதிப்பு தொகையை அவரிடம் வசூலிப்பதோடு, வெட்டப்பட்ட மரத்துண்டுகளை பொது ஏலம் விட்டு, அரசு கருவூலகத்தில் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.வடவள்ளி, மகாராணி அவென்யூவில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், பேஸ்--1, குறிச்சி வீதியில், சாலையின் இருபுறத்திலும் நுாற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன. மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள கிளைகளை வெட்ட, அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.கடந்த, ஜன., 27ல், மாநகராட்சி சார்பில், பணியாளர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள், மரக்கிளைகளை மட்டும் வெட்டாமல், 30 வயதுடைய மரமல்லி மரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்தனர். அதிர்ச்சி அடைந்த, குடியிருப்புவாசிகள், மரம் வெட்ட எதிர்ப்பு தெரிவித்ததும், மரத்துண்டுகளை விட்டு விட்டு, அப்பணியாளர்கள் ஓட்டம் பிடித்தனர். மரம் வெட்டப்பட்டு, ஒரு மாதத்துக்கு மேலாகியும், மரத்துண்டுகள் எடுக்கப்படாமல், சாலை ஓரத்தில் கிடக்கின்றன.இவ்விவகாரத்தில், வரு வாய்த்துறை அனுமதியின்றி, மரத்தை வெட்டிய வெங்கடாசலம் என்பவருக்கு, 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவரிடம் இருந்து மரத்தின் மதிப்பு மற்றும் அபராத தொகையை வசூலித்தும், வெட்டப்பட்ட மரத்தை பொது ஏலத்தில் விட்டு, ஏலத்தொகையை அரசு கருவூலகத்தில் செலுத்தவும், மாநகராட்சி மேற்கு மண்டல உதவி கமிஷனருக்கு, தெற்கு ஆர்.டி.ஓ., செந்தில் அரசன் உத்தரவிட்டுள்ளார்.இனியும் காலம் தாழ்த்தாமல், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். வெட்டப்பட்ட மரங்களை பொது ஏலம் விட்டு, மரத்துண்டுகளை அகற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X