ஓசூர்:பச்சிளம் குழந்தையை அடித்து கொன்ற தந்தை, கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி, 23. இவரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அபிநயா, 24, என்பவரும், காதலித்து திருமணம் செய்தனர்.இவர்களுக்கு, ஒன்பது மாதத்தில், ஜெய்கிருஷ்ணா என்ற ஆண் குழந்தை இருந்தது. தேன்கனிக்கோட்டை அடுத்த அய்யூரில், தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டில், இருவரும் தங்கி பணியாற்றினர்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன், சிங்காரப்பேட்டைக்கு அவர்கள் வந்தபோது, அபிநயாவை, சிவமூர்த்தியின் பெற்றோர் ஏற்க மறுத்தனர். அவர் குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.சிவமூர்த்திக்கு வேறு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்ததை அறிந்த அபிநயா, தன் குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு சமீபத்தில் வந்தார்.
கடந்த, 28ல், குழந்தையை வீட்டில் விட்டு வெளியே சென்றார்.சிறிது நேரம் கழித்து வந்தபோது, குழந்தையின் உடல்நிலை மோசமாக இருந்ததால், ராயக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைஉயிரிழந்தது.இந்நிலையில், குழந்தையை சுவரில் அடித்து கொன்றதாக, வி.ஏ.ஓ., சசிகுமார் முன்னிலையில், சிவமூர்த்தி சரணடைந்தார்.