- சேதுராமன் சாத்தப்பன் - ஒவ்வொரு சிறுதானியமும், தனித்தனி மணத்தையும், சுவையையும் கொண்டது. தற்காலத்தில் 'மருந்தே உணவு' என இருக்கும் நமக்கு, நம் முன்னோர் காட்டிய வழி என்னவென்றால், 'உணவே மருந்து' என்பது தான். உண்ணும் உணவிலேயே சத்துக்களையும் பெற்றனர்.ஆதிகாலத்தில் மனிதன், முதன் முதலில் அரிசியை மூங்கில் மரத்திலிருந்து தான் கண்டுபிடித்தான். எனவே, அதற்கு 'மூங்கிலரிசி' என்று பெயரிட்டான். இதன் வாயிலாக நெற்பயிரை கண்டு பிடித்து அதற்கு பல பெயர்களை சூட்டினான். பின்பு சிறுதானிய வகைகளையும், பயிறு வகைகளையும் ஒவ்வொன்றாக கண்டுபிடித்தான்.மருத்துவ குணம்மூங்கில் மற்ற தாவரங்களை போல், ஒவ்வோர் ஆண்டும் பருவத்தில் பூக்காமல், தன் வாழ்நாளை முடிக்கும்போது, தன் இனத்தை பரப்ப பூத்து விதைகளை உருவாக்கும். கிட்டத்தட்ட கோதுமை போல காட்சியளிக்கும் அந்த விதைகள் தான் 'மூங்கில் அரிசி' எனப்படுகிறது.மருத்துவ குணமிக்க மூங்கில் அரிசிக்கான தேவை அதிகளவில் இருப்பதால், அவற்றை சேகரிக்க பழங்குடியின மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வனப்பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் கொட்டி கிடக்கும் மூங்கிலரிசியை, பழங்குடியின பெண்கள் ஆர்வத்துடன் சேகரித்து வருகின்றனர்.இதுதவிர, குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் உட்பட பல சிறுதானியம் இருக்கிறது.'சிறுதானிய ஸ்டார்ட் அப்'இந்தியாவில், 100க்கணக்கான மில்லட் (சிறுதானியம்) 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகள் துவக்கப்பட்டுள்ளன. அவற்றில், 24 Mantra, Organic India, Conscious Foods, Ecofarms, Nature Basket, Navdanya, Down to Earth ஆகியவை முக்கியமானவை. இவை பெரியளவில் இந்தியாவில் ஆன்லைன் வாயிலாக வியாபாரம் செய்கின்றன. இவை, சிறு தானியங்கள் மட்டுமில்லாமல், மற்ற ஆர்கானிக் வகை உணவுகளையும் விற்பனை செய்கின்றன.'நியூட்ரி ஹப்' 'நியூட்ரி ஹப்' (Nutri Hub) என்பது மத்திய அரசின் 'டிபார்ட்மென்ட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி' துறையில் நிர்வகிக்கப்படுகிறது. இவர்களின் முக்கிய நோக்கம், சிறுதானிய உணவு வகைகளில் ஈடுபட விரும்பும் 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகளுக்கு, ஆரம்ப நிலை தேவைகளை பூர்த்தி செய்வதாகும்.தமிழகமும் -சிறுதானியமும்தமிழகத்தில், சிறுதானிய வகைகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில், 25 லட்சம் ஏக்கருக்கு மேலாக சிறுதானியம் விளைவிக்கப்படுகிறது. இவைகளை நல்ல முறையில், பிராண்ட் செய்து'ஆன்லைன்' வாயிலாக விற்பனை செய்வது என்பது நல்ல ஒரு தொழில் வாய்ப்பு.சந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com, மொபைல் போன்: 98204-51259, இணைய தளம்:www.startupandbusinessnews.com.