போர் வெற்றியின் பொன்விழா ஆண்டு; கோவை வந்த ஜோதிக்கு கோலாகல வரவேற்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
போர் வெற்றியின் பொன்விழா ஆண்டு; கோவை வந்த ஜோதிக்கு கோலாகல வரவேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 மார்
2021
04:29

கோவை;இந்தியா - பாக்., போர் வெற்றி பெற்றதன், பொன் விழா ஆண்டை முன்னிட்டு, கோவை வந்த, வெற்றி ஜோதிக்கு கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.கடந்த, 1971ம் ஆண்டு, இந்தியா - பாக்., இடையே நடந்த போரில், இந்தியா வெற்றி பெற்று, 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, 'ஸ்வர்ண விஜய் வர்ஷ்' எனும் பெயரில் பொன் விழா கொண்டாடப்படுகிறது.பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நான்கு வெற்றி ஜோதிகள், டிச., 20ல் பிரதமர் நரேந்திர மோடியால் ஏற்றப்பட்டது.இந்த ஜோதி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. போரில் உயிர் நீத்த மற்றும் வீரத்துடன் போரிட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஜோதி, பல்வேறு மாநிலங்களுக்கும் எடுத்து செல்லப்பட்டு வருகிறது.இந்த ஜோதி நேற்று கோவை ரெட்பீல்ட்ஸ் ராணுவ மையம், 110 பட்டாலியன் வளாகத்துக்கு வந்தது.ஜோதியை ராணுவ மைய தலைமையக கமாண்டர் கர்னல் பியூஸ் கதல் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஜோதிக்கு என்.சி.சி., மாணவர்கள், வீரர்கள் மரியாதை செலுத்தினர்.கர்னல் பியூஸ் கதல் கூறுகையில்,''இந்த வெற்றி ஜோதியை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம். வரும், 16ம் தேதி வரை, ஜோதி இங்கே இருக்கும். 10 நாட்களும், வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. எதிர்கால சந்ததியை ஊக்குவிக்கும் வகையில், இந்நிகழ்வுகள் இருக்கும்,'' என்றார்.150 வீரர்கள் கவுரவிப்பு'ஸ்வர்ண விஜய் வர்ஷ்' நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அலுவலர் கர்னல் கிரிஷ்பார்த்தன் கூறுகையில்,''கடந்த, 1971ம் ஆண்டு நடந்த போரால், புதிய நாடு வங்கதேசம் உருவானது. இந்த போரில் தான், 93 ஆயிரம் கைதிகள் பிடிபட்டனர். உலக வரலாற்றில் வேறு எந்த போரிலும், இந்தளவுக்கு கைதிகள் பிடிபட்டதில்லை. பெங்களூருவில் இருந்து ஜோதி வந்துள்ளது. இப்போரில் பங்கு பெற்ற, 1,200 பேர், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ளனர். போரில் பங்கேற்ற, 150 பேர், வரும், 10ம் தேதி நடக்கும் நிகழ்வில் கவுரவிக்கப்பட உள்ளனர். இதன் பின், ஜோதி கொச்சி செல்கிறது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X