ரூ.92 லட்சம் வரிப்பணம் வீண் பூட்டிக்கிடக்குது மலர் அங்காடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

08 மார்
2021
03:11
பதிவு செய்த நாள்
மார் 07,2021 23:29

கோவை: கோவை மாநகராட்சி சார்பில், லாலி ரோட்டில், ரூ.92 லட்சம் செலவில், புதிதாக, 97 தரைக்கடைகளுடன் கட்டிய மலர் அங்காடி பூட்டிக்கிடக்கிறது.



கோவை, லாலி ரோடு, பூ மார்க்கெட்டில், 144 மேடை கடைகள், 28 ஸ்டால் கடைகள் உள்ளன. அதிகமான மக்கள் வந்து சென்றதால், கொரோனா பரவ வாய்ப்பு உருவானது. அதனால், மார்க்கெட் மூடப்பட்டு, தேவாங்கபேட்டை பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டது.பழைய மார்க்கெட் கட்டடத்தை இடித்து விட்டு, பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நடந்து சென்று, பூக்கள் வாங்க வசதியாக, புதுப்பித்துக் கட்ட திட்டமிடப்பட்டது.அதுவரை வியாபாரிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, 'அம்மா' உணவகம் அருகே செயல்படும் மார்க்கெட்டுக்கான வாகன நிறுத்துமிடத்தில், 97 தரைக்கடைகள் கட்டப்பட்டன.



புதுக்கடைகள் என்பதால், ஏலம் விட்டே, ஒதுக்கீடு செய்யப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. வியாபாரிகளில் ஒருவர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து, ஏலம் விடுவது நிறுத்தப்பட்டது.பள்ளிகள் மீண்டும் செயல்பட துவங்கியதால், பழைய மார்க்கெட் வளாகத்தில் பூக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.ஏலப்பிரச்னையால், 92 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட மலர் அங்காடி திறக்கப்படாமலேயே மூடிக்கிடக்கிறது. மாநகராட்சி உயரதிகாரிகள் மவுனம் சாதிக்கின்றனர். மக்கள் செலுத்திய வரி பணமே வீணாகியுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X