தாண்டிக்குடி, தாண்டிக்குடி மலைப்பகுதியில் தனியார் அலைபேசி சேவை பாதிப்பால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.மலைப்பகுதியில் வி.ஐ., ஜியோ 4 ஜி சேவையளித்து வருகிறது. பி.எஸ்.என்.எல்., பழைய தொழில்நுட்பத்துடன் அடிக்கடி சேவை பாதிப்பு ஏற்படுவது வழக்கம். வி.ஐ., அலைபேசி கடந்த ஒரு வாரமாக தொழில்நுட்ப பாதிப்பால் அழைப்பு மற்றும் தொடர்பு கொள்ள முடியாத நிலையால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.மற்றொரு தனியார் அலைபேசி சேவையும் சரிவர கிடைக்காத சூழல் உள்ளதால் மலைப்பகுதியினர் தொலை தொடர்பு சேவை பாதிப்பால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். சேவையளிக்கும் நிறுவனங்கள் சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.