மலைப்பகுதியில் அலைபேசி சேவை பாதிப்பு | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
மலைப்பகுதியில் அலைபேசி சேவை பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 மார்
2021
00:56

தாண்டிக்குடி, தாண்டிக்குடி மலைப்பகுதியில் தனியார் அலைபேசி சேவை பாதிப்பால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.மலைப்பகுதியில் வி.ஐ., ஜியோ 4 ஜி சேவையளித்து வருகிறது. பி.எஸ்.என்.எல்., பழைய தொழில்நுட்பத்துடன் அடிக்கடி சேவை பாதிப்பு ஏற்படுவது வழக்கம். வி.ஐ., அலைபேசி கடந்த ஒரு வாரமாக தொழில்நுட்ப பாதிப்பால் அழைப்பு மற்றும் தொடர்பு கொள்ள முடியாத நிலையால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.மற்றொரு தனியார் அலைபேசி சேவையும் சரிவர கிடைக்காத சூழல் உள்ளதால் மலைப்பகுதியினர் தொலை தொடர்பு சேவை பாதிப்பால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். சேவையளிக்கும் நிறுவனங்கள் சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X