திண்டுக்கல் :'ஓட்டர் ெஹல்ப் லைன்' செயலி மூலம் வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை அறியலாம்.வாக்காளர்களுக்காக 'ஓட்டர் ெஹல்ப் லைன்' செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. பிளே ஸ்டோரில் 'Voter Help line' செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். அதில் வாக்காளர் பெயர் சரிபார்த்தல், புதிய வாக்காளர் சேர்க்கை, தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்புகளை எளிதில் அறியலாம். பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை மாற்றுவதற்காக தனியாக விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இலவச எண்ணான 1950மூலம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய முடியும். இது மட்டுமின்றி தேர்தல் ஆணையத்தின் www.nvsp.in ல் பெயர், புகைப்படம், முகவரி உள்ளிட்டவகைளை மாற்றி கொள்ளலாம். மேலும் இதற்கு முன் நடந்த தேர்தல் முடிவுகள், பங்கேற்ற கட்சிகளின் பெயர்கள், தொகுதி வாரியாக பெற்ற ஓட்டுக்கள், வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் அறியலாம். தற்போதயை தேர்தல் நிலவரம், தேர்தல் தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.