காங்., செயல் தலைவர் ஆறுமுகம் என்.ஆர். காங்., கட்சியில் இணைந்தார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2021
05:36

புதுச்சேரி : காங்., செயல் தலைவர் ஆறுமுகம் தனது ஆதரவாளர்களுடன் என்.ஆர்.காங்., கட்சியில் இணைந்தார்.



புதுச்சேரி காங்., ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், மற்றும் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ.க்கள் பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.தொடர்ந்து லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., ராஜினாமா செய்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, காங்., கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர்.இந்நிலையில், காங்., செயல் தலைவர் ஆறுமுகம், நேற்று அக்கட்சியில் இருந்து விலகி, தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்., கட்சியில் இணைந்தார்.



அவரை சால்வை அணிவித்து ரங்கசாமி வரவேற்றார். தொடர்ந்து இருவரும் கோரிமேடு அப்பா பைத்திய சுவாமிகள் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.என்.ஆர்.காங்., கட்சியில் இணைந்துள்ள ஆறுமுகம், கடந்த 2011 ம் சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்.,வேட்பாளர் ரங்கசாமியை எதிர்த்து காங்.,கட்சி சார்பில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ரங்கசாமி 20,685 ஓட்டுகளும், ஆறுமுகம்-4,008 ஓட்டுகள் பெற்றனர்.அதனை அடுத்து வந்த இந்திரா நகர் இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்.,வேட்பாளர் தமிழ்செல்வனை எதிர்த்து நின்ற ஆறுமுகம் 7,007 ஓட்டுகள் பெற்றார். தமிழ்செல்வன்-15,053 ஓட்டுகள் பெற்று வெற்றிப் பெற்றார்.தொடர்ந்து கடந்த 2016 சட்டசபை தேர்தலில் என்.ஆர் காங்., வேட்பாளர் ரங்கசாமியை எதிர்த்து நின்ற ஆறுமுகம் 12,059 ஓட்டுகளை பெற்றார்.



ரங்கசாமி 15,463 ஓட்டுகள் பெற்று வெற்றிப் பெற்றார்.காங்.,செயல் தலைவர் ஆறுமுகம் என்.ஆர். காங்.,கட்சியில் இணைந்தன் மூலம் இந்திரா நகர் தொகுதியில் என்.ஆர் காங்.,பலம் கூடியுள்ளது.ஆறுமுகம் நீக்கம்: காங்.,தலைவர் அறிவிப்புஆறுமுகம் என்.ஆர் காங்.,கட்சியில் இணைந்ததை தொடர்ந்து காங்., மாநில தலைவர் ஏ.வி.,சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்.,கட்சியில் செயல் தலைவர் ஆறுமுகம், காங்.,கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வேறு கட்சியில் இணைந்துள்ளர்.எனவே அவரை காங்.,கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மற்றும் காங்.,கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார் எனக் கூறப்பட்டுள்ளது.



காங்., அரசால் மக்களுக்குஎந்தவித பயனும் இல்லைஆறுமுகம் அளித்த பேட்டி:காங்., கட்சி கூறியதால், என்.ஆர்.காங்., ரங்கசாமியை எதிர்த்து 3 முறை தேர்தலில் போட்டியிட்டேன். கடந்த முறை 12,000க்கு மேல் ஓட்டுகளை பெற்றேன். ஆனால், 5 ஆண்டுகளாக தொகுதி மக்களுக்கு காங்., அரசால் எந்தவித பயனும் இல்லை.கட்சியில் இருந்து வெளியேற முடிவு செய்ததால், செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த பதவியால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. இதையடுத்து, எனது ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி மக்களிடம் கருத்து கேட்டேன்.அவர்களின் கருத்துபடி, என்.ஆர். காங்., கட்சியில் இணைந்துள்ளேன். என்.ஆர்.காங்.,க்கு சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்.ஆர்.காங்., கட்சிதான் ஆட்சி அமைக்கும்இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X