100 சதவீத ஓட்டுப்பதிவு இலக்கை அடைய மக்கள் ஒத்துழைக்க கலெக்டர் வேண்டுகோள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2021
13:42

ஓசூர்: ஓசூரில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, 100 சதவீத ஓட்டுப்பதிவு இலக்கை அடைய ஒத்துழைக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார். ஓசூர், ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவரது தலைமையில், மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் மற்றும் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். மேலும், மைதானத்தில் இருந்து, உழவர் சந்தை, தேன்கனிக்கோட்டை சாலை வழியாக, சப் கலெக்டர் அலுவலகம் வரை பேரணி சென்றது. ஓசூர் பஸ் ஸ்டாண்டில், பொதுமக்கள் எவ்வாறு ஓட்டளிக்க வேண்டும். யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது என, ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.


முன்னதாக, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசியதாவது: மாவட்டத்தில், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய, பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 6 சட்டசபை தொகுதிக்கும் தலா, 20 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டு, பொதுமக்கள் கூடும் இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 100 சதவீத ஓட்டுப்பதிவு என்ற இலக்கை அடைய, வாக்காளர்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X