'தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெறும்' | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
'தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெறும்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 மார்
2021
13:43

ஓசூர்: ''தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணி பெரியளவில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும்,'' என, பா.ஜ., தமிழக தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.


கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., சார்பில், ஓசூரில் நடந்த ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, ஆட்சியை அமைக்கும். அ.தி.மு.க., தலைமையிலான அரசு, தமிழகத்தில் மீண்டும் அமைவது உறுதி. கூட்டணி தர்மத்தை மதிப்பது தான் முக்கியம் என்பதால், தொகுதி ஒதுக்கீடு எண்ணிக்கையில் திருப்தி, அதிருப்தி என்பது ஒரு பொருட்டே அல்ல. தமிழகத்தில், பா.ஜ., போட்டியிடும், 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும். எங்கள் ஆதரவு பெற்ற, அ.தி.மு.க., தலைமையிலான அரசு அமைந்தே தீரும். இவ்வாறு, அவர் கூறினார். 'பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு, தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா' என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ''காங்., - தி.மு.க., கூட்டணியின் கடந்தகால ஆட்சியின் பல்வேறு முறைகேடுகள் காரணமாகவே, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோலிய பொருட்களை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர, பெரும்பாலான மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை,'' என்றார். பேட்டியின் போது, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் உடனிருந்தனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X