தபால் ஓட்டு விபரம் சேகரிக்கும் அலுவலர்கள் அலைகழிப்பு | கடலூர் செய்திகள் | Dinamalar
தபால் ஓட்டு விபரம் சேகரிக்கும் அலுவலர்கள் அலைகழிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 மார்
2021
05:20

கடலுார் - தபால் ஓட்டு விபரம் சேகரிக்க வீடு வீடாகச் செல்லும் தேர்தல் அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரால் அலைகழிக்கப்படுகின்றனர்.தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவைக் கருத்தில் கொண்டு, முதன் முறையாக 80 வயதிற்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா பாதித்தவர்களுக்கு தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதையடுத்து, வாக்காளர் பட்டியல் மூலம் தபால் ஓட்டுக்கு தகுதியானவர்கள் கணக்கெடுக்கப்பட்டது.அதில், கடலுார் மாவட்டத்தில், 80 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 40 ஆயிரம் பேர். மாற்றுத் திறனாளிகள் 20 ஆயிரம் பேர் என கண்டறியப்பட்டுள்ளது.தற்போது, ஓட்டுப்பதிவு மையங்கள் வாரியாக ஓட்டுப்பதிவு அலுவலர்கள் வீடு, வீடாகச் சென்று, தபால் ஓட்டுக்கு தகுதியானவர்களை சந்தித்து, தபால் ஓட்டு போடுகிறீர்களா, ஓட்டுச்சாவடி மையத்திற்கு வந்து ஓட்டு போடுகிறீர்களா என, விபரம் சேகரித்து வருகின்றனர்.அவ்வாறு செல்பவர்களிடம் நம்பாமல் விபரம் கூற மறுக்கின்றனர்.விபரம் சேகரிக்கும் அலுவலர்கள் கூறுகையில், 'பொதுமக்கள் சிலர் நம்பிக்கையின்றி விபரங்களைக்கூற மறுக்கின்றனர். அரசியல் கட்சியினரோ, நாங்கள் ஓட்டு சேகரிக்க வந்திருப்பதாகவும், ஒரு தரப்பாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.தபால் ஓட்டு குறித்த விருப்பத்தைக் கேட்டு பதிவு செய்ய வந்திருப்பதாகக் கூறியும் ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து பொதுமக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X