விளையாட்டு செய்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2021
07:18

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி மாணவன் தேசிய 'சான்ஷோ' போட்டிக்கு தகுதி



தேசிய அளவிலான சான்ஷோ போட்டிக்கு கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் படிக்கும் முத்து அகிலரசு, தேர்வாகி உள்ளார்.'சான்ஷோ' என்பது, தற்காப்புக் கலை விளையாட்டுகளில் ஒன்று. கடந்த மாதம் துாத்துக்குடியில் நடந்த, மாநில அளவிலான சான்ஷோ விளையாட்டு போட்டியில் முத்து அகிலரசு, முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.இந்த வெற்றியின் மூலம் வரும், 25ம் தேதியன்று சண்டிகர் பல்கலையில் நடக்கவுள்ள, தேசிய சான்ஷோ போட்டிக்கு தேர்வாகி அசத்தியுள்ளார்.இம்மாணவனை, கல்லுாரி முதல்வர் சிவக்குமார், உடற்கல்வித்துறை இயக்குனர் வடிவேலு, பேராசியர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.



தேசிய பூப்பந்து போட்டிக்கு கோவையில் வீரர்கள் தேர்வு



திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் பூப்பந்து கழகம் சார்பில், சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தமிழக பூப்பந்து அணி தேர்வு வரும், 14ம் தேதியன்று திருவொற்றியூரில் நடக்கிறது.இதற்கான கோவை மாவட்ட பூப்பந்து அணி தேர்வு நாளை, நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி பூப்பந்து மைதானத்தில் நடக்கிறது. இதில், சீனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி தேர்வில் பங்கேற்கலாம்.மேலும் விபரங்கள் அறிய, 98431 43210 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, கோவை மாவட்ட பூப்பந்து கழக செயலாளர் (பொ) மார்ஷல் தெரிவித்தார்.



மூன்றாம் டிவிஷன் போட்டி; ஸ்ரீ சக்தி கல்லுாரி அணி வெற்றி



மாவட்ட அளவிலான மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டியில், ஸ்ரீசக்தி இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி சி.சி., அணி, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019-20ம் ஆண்டு 'தாமோதரன் அறக்கட்டளை டிராபிக்கான' மூன்றாம் டிவிஷன் லீக் போட்டிகள், கோவையின் பல்வேறு பகுதிகளில் நடந்தன.ஸ்ரீசக்தி இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில், மிராக்கிள் கிரிக்கெட் கிளப் அணி, ஸ்ரீசக்தி இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி சி.சி., அணிகள் மோதின.முதலில் விளையாடிய மிராக்கிள் சி.சி., அணி, 49.4 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 214 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஸ்ரீசக்தி இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 48.4 ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 216 ரன் எடுத்து, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.




இன்ஜி., கல்லுாரிகளுக்கான 'ஜோன்-10'விளையாட்டு போட்டி நாளை துவக்கம்




அண்ணா பல்கலை கழகத்திற்கு உட்பட்ட, கோவை-10வது மண்டல இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், நாளை துவங்கி வரும், 31ல் நிறைவடைகிறது.கோவை மாவட்டத்தில் அண்ணா பல்கலை கழகத்திற்கு உட்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளை ஜோன்-9, ஜோன்-10, ஜோன்-11 என மூன்று மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.இவ்வாண்டுக்கான ஜோன்-10 இன்ஜி., கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து, வாலிபால் நாளை துவங்கி, 13ல் நிறைவடைகிறது.



* மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி பொள்ளாச்சி, பி.ஏ., கல்லுாரியில் வரும், 15, 16ம் தேதிகளில் நடக்கவுள்ளது.* மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி பொள்ளாச்சி, மகாலிங்கம் இன்ஜி., கல்லுாரியில் வரும், 22ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கவுள்ளது.* மாணவர்களுக்கான பூப்பந்து போட்டி கற்பகம் இன்ஜி., கல்லுாரியில் வரும், 23, 24ம் தேதிகளில் நடக்கவுள்ளது.



* மாணவர்களுக்கான கோ- கோ போட்டி, பொள்ளாச்சி, மகாலிங்கம் இன்ஜி., கல்லுாரியில் வரும், 26, 27ம் தேதிகளில் நடக்கவுள்ளது.முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டிகாஸ்மோ வில்லேஜ் அணி வெற்றிமாவட்ட அளவிலான முதல் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டியில், காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019- 20ம் ஆண்டு, 'லட்சுமி கார்டு குளோத்திங்' முதல் டிவிஷன் போட்டி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மைதானங்களில் நடந்தது.பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்த போட்டியில், ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் அணி, காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணிகள் மோதின.முதலில் 'பேட்' செய்த ஆறுமுகம் லெவன் அணி, 40.2 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 99 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய காஸ்மோ வில்லேஜ் அணி, 25.4 ஓவரில், மூன்று விக்கெட் இழப்புக்கு, 100 ரன் எடுத்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X