மாவட்ட கபடி போட்டி: பி.ஜெ., பிரதர்ஸ் சாம்பியன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2021
03:28

கோவை மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில், மாவட்ட அளவிலான ஜூனியர் கபடி சாம்பியன் ஷிப் போட்டி, நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடந்தது. 38 அணிகள் பங்கேற்றன.ஆண்கள் பிரிவில், பி.ஜெ., பிரதர்ஸ் அணி முதலிடம், ராஜாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி இரண்டாமிடம்; பெண்கள் பிரிவில், சிவக்குமார் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலிடம், ரத்தினம் கல்லுாரி அணி இரண்டாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.3வது டிவிஷன் கிரிக்கெட் இ.ஏ.பி., அணி வெற்றி பொள்ளாச்சி, என்.பி.டி., மைதானத்தில் நடந்த 3வது டிவிஷன் போட்டியில், இ.ஏ.பி., அணி, என்.ஐ.ஏ., சி.சி., அணிகள் மோதின. முதலில் விளையாடிய இ.ஏ.பி., அணி, 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 224 ரன் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக விஜய்-46 ரன் எடுத்தார். அடுத்து களமிறங்கிய என்.ஐ.ஏ., அணி, 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 182 ரன் மட்டுமே எடுத்து, 42 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அணியில் சிறப்பாக பந்து வீசிய, மாரிமுத்து-3 விக்கெட் கைப்பற்றினார். பெண்கள் பூப்பந்து போட்டிகோவை வீராங்கனைகள் தேர்வுதிருவள்ளூர் மாவட்டம், திருவெற்றியூர் பூப்பந்து கழகம் சார்பில், சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தமிழக பூப்பந்து அணி தேர்வு திருவெற்றியூரில், இன்று நடக்கிறது. இதற்கான கோவை மாவட்ட அணி தேர்வு, நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி பூப்பந்து மைதானத்தில் நடந்தது. 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். மாணவிகள் பிரிவில், நிர்மலா கல்லுாரியின் சவுமியா மேரி, காருண்யா பல்கலையின் யூனுஸ் பிரிசில்லா, ஆவாரம்பாளையம் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியின் முத்தரசி ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இத்தகவலை, கோவை மாவட்ட பூப்பந்து கழக செயலாளர் (பொ) மார்ஷல் தெரிவித்தார். இன்ஜி.,மாணவிகளுக்கான இறகுப்பந்து போட்டிசரவணம்பட்டி எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரியின் சார்பில், ஜோன்-11 இன்ஜி., கல்லுாரி மாணவிகளுக்கான இறகுப்பந்து போட்டி, கல்லுாரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. 4 கல்லுாரிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதிப்போட்டியில், குமரகுரு கல்லுாரி (கே.சி.டி.,) அணி, 2-0 என்ற செட் ஸ்ரீரங்கநாதர் இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணியையும்; 2வது போட்டியில், எஸ்.என்.எஸ்., டெக் அணி, 2-0 என்ற செட் கணக்கில், ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணியை வென்றது. இறுதிப்போட்டியில், எஸ்.என்.எஸ்., டெக் அணி, 2-0 என்ற செட் கணக்கில், கே.சி.டி., அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, கல்லுாரி முதல்வர் செந்துாரப்பாண்டியன் கோப்பைகள் வழங்கினார். போட்டி ஒருங்கிணைப்பாளராக, கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் தினகரன் செயல்பட்டார். 2வது டிவிஷன் கிரிக்கெட்ஆர்.கே.எஸ்., அணி வெற்றி மாவட்ட அளவிலான, 2வது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணி, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019- 20ம் ஆண்டு, 'யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேன்சர்ஸ்' கோப்பைக்கான, இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டி, கோவையின் பல்வேறு மைதானங்களில் நடந்தது. பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்த போட்டியில், ரெயின்போ 1972 எம்.எம்.சி.சி., அணி, 47.3 ஓவரில், 182 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆர்.கே.எஸ்., அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 44.1 ஓவரில், ஐந்து விக்கெட் இழப்புக்கு, 183 ரன் எடுத்து, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆன்லைன் செஸ் போட்டிஹரிஷ் முருகன் முதலிடம்கோவை, குளோபல் அவுட்லியர் அகாடமி சார்பில், நடத்தப்பட்ட ஆன்லைன் செஸ் போட்டியில், ஹரிஷ் முருகன் முதலிடம் பிடித்து அசத்தினார்.செஸ் வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் கோவை, குளோபல் அவுட்லியர் அகாடமியின் சார்பில், ஆன்லைன் வாயிலாக செஸ் போட்டி நடத்தப்பட்டது. ஏழு சுற்றுகளாக நடந்த போட்டியில், வீரர்கள் பங்கேற்றனர்.போட்டியின் முடிவில், ஹரிஷ் முருகன், ஒகினி நயோ ஆகியோர் அதிக புள்ளிகள் பெற்று முதல், இரண்டு இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு, இ- சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட டென்னிஸ் போட்டிவீராங்கனைகள் அசத்தல் எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனம் சார்பில், மாணவிகளுக்கான டென்னிஸ் போட்டி சரவணம்பட்டி, எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. 16, 18, 25 வயது என, மூன்று பிரிவுகளில் போட்டி நடக்கிறது.நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு முடிவு:* 16 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான முதல் அரையிறுதிப்போட்டியில் சாத்விக்கா,7-3 என்ற புள்ளி கணக்கில், கனிஷ்காவை வென்றார்.* 25 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான முதல் அரையிறுதிப்போட்டியில், சகாயா ஏஞ்சலின் ஷாலினி, 7-2 என்ற புள்ளி கணக்கில், நிவேதா எமாரால்டுவையும்; 2வது போட்டியில், தர்ஷனா 7-4 என்ற புள்ளி கணக்கில் பிரியதர்ஷினியையும் வென்றார். வெற்றி பெற்ற வீராங்கனைகள், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X