டால்பின், ஏ.வி.பி., கபடியில் கலக்கல் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
டால்பின், ஏ.வி.பி., கபடியில் கலக்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 மார்
2021
23:48

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாவட்ட கபடி போட்டி, காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடந்தது.ஆண்கள் பிரிவில், 30 அணிகளும், பெண்கள் பிரிவில், பத்து அணிகளும் பங்கேற்றன. ஆண்கள் இறுதி போட்டியில், அருள்புரம் டால்பின் கபடி கிளப் - தாராபுரம் ஸ்போர்ட்ஸ் கிளப் மோதின.இதில், 31 - 28 என்ற புள்ளிக்கணக்கில் டால்பின் அணி வெற்றி பெற்றது. பெண்கள் இறுதி போட்டியில், ஆத்துப்பாளையம் ஏ.வி.பி., கல்லுாரி அணி - திருமுருகன்பூண்டி ஏ.பி.ஜே., நினைவு கபடி குழு மோதின. 24 - 21 என்ற புள்ளிக்கணக்கில் ஏ.வி.பி., அணி வென்றது.வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பையை ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், பொருளாளர் மோகன், மெஜஸ்டிக் கந்தசாமி உள்ளிட்டோர் வழங்கினர்.கபடி கழக சேர்மன் முருகேசன், தலைவர் மனோகரன், செயலாளர் சண்முகம், பொருளாளர் ஆறுச்சாமி உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X