கடலூரில் 70 நாட்களில் 11 கொலைகள்- அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் அச்சம் | கடலூர் செய்திகள் | Dinamalar
கடலூரில் 70 நாட்களில் 11 கொலைகள்- அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் அச்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மார்
2021
05:05

கடலுார் - கடலுாரில் கடந்த 70 நாட்களில் அடுத்தடுத்து நடந்த 11 கொலை சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கடலுாரில் இந்த ஆண்டு துவக்கம் முதல் கொலை சம்பவங்களுக்கு பஞ்சமில்லை. தலையை வெட்டி தனியாக எடுப்பது, தலையில் கல்லைப் போட்டு நசுக்குவது, நகைக்காக தாய், மகளை வெட்டி வீழ்த்தியது.மூதாட்டிகளை நகைக்காக இரும்பு ராடால் அடித்தது கொலை என கொடூர சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியுள்ளது.கடந்த ஜனவரி 7ம் தேதி கடலுார், பாதிரிக்குப்பம் முருகேசன் நகரில் தனியாக வசித்து வந்த மூதாட்டிகள் பச்சையம்மாள், 65; தாயாரம்மாள், 70; இருவரும் நகைக்காக இரும்பு ராடால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.அதே மாதம் 21ம் தேதி, கடலுார் முதுநகர் மோகன்சிங் வீதியைச் சேர்ந்த சமையல்காரர் பரசுராமன், 57; தனது மகன் சக்திவேல் என்பவரால் நாற்காலியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.பிப்ரவரி 16ம் தேதி, முன்விரோதம் காரணமாக திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகரைச் சேர்ந்த ரவுடி வீரா என்கிற வீராங்கன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்துவிட்டு தப்பிய கொலையாளி போலீஸ் என்கவுன்டரில் பலியானார்.அடுத்த 28ம் தேதி, எஸ்.என். சாவடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபு, 35; முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.இச்சம்பவத்திற்கு அடுத்த நாளே, ரெட்டிச்சாவடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட இடையார்பாளையம் அருகே, நகைக்காக விஜயலட்சுமி, 48; அவரது மகள் மாதங்கி என்கிற சந்தியா இருவரும், இளநீர் வியாபாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.இந்த கொலை சம்பவம் மறைவதற்குள் கடந்த 15ம் தேதி கடலுார் முதுநகர் சோனங்குப்பத்தைச் சேர்ந்த நம்புராஜன் என்பவரால், அவரது மனைவி மீனா, மாமியார் பூங்கொடி இருவரும் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர்.இந்நிலையில் நேற்று குறிஞ்சிப்பாடி அருகே சொத்து தகராறில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஜனவரி 7ம் தேதி துவங்கி, நேற்று வரை 70 நாட்களில் அடுத்தடுத்து நடந்த 11 கொலை சம்பவங்கள் கடலுார் மக்களை அச்சமடையச் செய்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க போலீஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X