இன்ஜி., கல்லூரி கூடைப்பந்து:ஸ்ரீஈஸ்வர் கல்லூரி அணி சாம்பியன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2021
23:14

கிணத்துக்கடவு, ஸ்ரீஈஸ்வர் இன்ஜி., கல்லுாரியின் சார்பில், ஜோன்-10 இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான கூடைப்பந்து, வாலிபால் போட்டிகள் நடந்தது. 12 அணிகள் பங்கேற்றன.* மாணவர்களுக்கான கூடைப்பந்து இறுதிப்போட்டியில், ஸ்ரீஈஸ்வர் கல்லுாரி அணி, 58-35 என்ற புள்ளி கணக்கில், ஸ்ரீகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது.* மாணவர்களுக்கான வாலிபால் இறுதிப்போட்டியில், ஸ்ரீஈஸ்வர் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், இந்துஸ்தான் இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது.வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.மாவட்ட கிரிக்கெட் போட்டிஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணி வெற்றிகோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019- 20ம் ஆண்டு, 'காசா கிராண்ட்' டிராபிக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்தது. இதில், ஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணி, கே.எப்., கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.முதலில் விளையாடிய ஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணியினர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 50 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு, 247 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய கே.எப்., கிரிக்கெட் கிளப் அணி, 38.1 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 143 மட்டுமே எடுத்தது. இதன் மூலம், ஸ்ரீ சி.சி., அணி, 104 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆறாவது டிவிஷன் கிரிக்கெட்'நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல்' வெற்றிகோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019-20ம் ஆண்டுக்கான, ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டி, கோவையின் பல்வேறு கல்லுாரி மைதானத்தில் நடந்தது.பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்த போட்டியில், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா சி.சி., அணி, நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் சி.ஏ., அணிகள் மோதின.முதலில் விளையாடிய ராமகிருஷ்ணா மிஷன் அணி, 42.1 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 173 ரன் எடுத்தது. நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் சி.ஏ., அணி, 35.5 ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 178 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சுகுணா கல்லுாரி சார்பில்கிரிக்கெட் போட்டிகோவை, நேருநகர் சுகுணா பாலிடெக்னிக் கல்லுாரியின் சார்பில், 'சுகுணா பிரிமியர் லீக்' 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது. 32 அணிகள் பங்கேற்றன.போட்டியின் முடிவில், கோவைப்புதுார் 'ஸ்மால் பாய்ஸ்' அணி முதலிடம், தொட்டிப்பாளையம் வைப்பர் சி.சி., இரண்டாமிடம் பிடித்தது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமிநாராயணசாமி கோப்பைகள் வழங்கினர். கல்லுாரி முதல்வர், டீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாவட்ட டென்னிஸ் போட்டி20 வீராங்கனைகள் பங்கேற்புஎஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனம் சார்பில், மாணவிகளுக்கான டென்னிஸ் போட்டி சரவணம்பட்டி, எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.மாணவிகளுக்கான, 16, 18, 25 வயது என, மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில், 20 வீராங்கனைகள் பங்கேற்றனர்.ஒற்றையர் பிரிவு* 16 வயதுக்கு உட்பட்ட இறுதிப்போட்டியில், விஷ்ருதி, 9-0 என்ற புள்ளி கணக்கில், சாத்விகாவையும்; 18 வயது பிரிவில், தர்ஷனா, 9-3 என்ற புள்ளி கணக்கில், பிரியதர்ஷினியையும்; 25 வயது பிரிவில், சகாயா ஏஞ்சலின், 9-1 என்ற புள்ளி கணக்கில், தர்ஷனாவையும் வென்றனர்.இரட்டையர் பிரிவு* 25 வயதுக்கு உட்பட்ட இறுதிப்போட்டியில், பிரியதர்ஷினி, தர்ஷனா ஜோடி அணி, 7-1 என்ற புள்ளி கணக்கில், சகாயா ஏஞ்சலின், நிவேதா எமரால்ட் ஜோடி அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள் வழங்கப்பட்டன.மூன்றாம் டிவிஷன் போட்டிஆறுமுகம் சி.சி., அணி வெற்றிகோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019-20ம் ஆண்டு 'தாமோதரன் அறக்கட்டளை டிராபிக்கான' மூன்றாம் டிவிஷன் லீக் போட்டி, கோவையின் பல்வேறு பகுதிகளில் நடந்தது.துடியலுார், 'டைமண்ட் சிட்டி' மைதானத்தில் நடந்த போட்டியில், சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணி, ஆறுமுகம் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.முதலில் விளையாடிய சூர்யபாலா அணி, 34.5 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 162 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆறுமுகம் சி.சி., அணி, 36 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு, 163 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தேசிய பூப்பந்து போட்டிக்குகோவை வீராங்கனை தேர்வுராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் 66வது சீனியர் ஆண், பெண்களுக்கான தேசிய பூப்பந்து போட்டி வரும், 31 துவங்கி, ஏப்., 4ல் நிறைவடைகிறது. இதற்கான தமிழக பூப்பந்து அணி தேர்வு கடந்த, 14ம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் பூப்பந்து கழகம் சார்பில், நடந்தது.இத்தேர்வில் கோவையிலிருந்து மூன்று வீராங்கனைகள் பங்கேற்றனர்.இதில், சிறப்பாக செயல்பட்ட நிர்மலா கல்லுாரியின் சவுமியா மேரி தேர்வாகி உள்ளார். பல்வேறு மாவட்டங்களிலிருந்து, 9 வீராங்கனைகள் தேர்வாகி உள்ளனர்.தேர்வாகிய வீராங்கனையை, கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன், கோவை மாவட்ட பூப்பந்து கழக செயலாளர் (பொ) மார்ஷல் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.இன்ஜி., மாணவர்களுக்கான செஸ்; நகர்வில் அசத்தல்காளப்பட்டி ரோடு, என்.ஜி.பி., தொழில்நுட்ப கல்லுாரியின் சர்பில், ஜோன்-9 இன்ஜி., கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. 12 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.மாணவர்கள் பிரிவில், பி.எஸ்.ஐ., ஐ டெக் கல்லுாரி அணி, 17.5 புள்ளிகள் பெற்று முதலிடம், ஸ்ரீசக்தி இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, 17 புள்ளிகள் பெற்று இரண்டாமிடம், கே.பி.ஆர்., கல்லுாரி அணி, 12 புள்ளிகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தன.மாணவிகள் பிரிவில், பி.எஸ்.ஐ., ஐ டெக் கல்லுாரி அணி, 16 புள்ளிகள் பெற்று முதலிடம், ஸ்ரீசக்தி இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, 17.5 புள்ளிகள் பெற்று இரண்டாமிடம், கே.பி.ஆர்., கல்லுாரி அணி, 13.5 புள்ளிகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தன.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கல்லுாரியின் முதல்வர் பொற்குமரன் கோப்பைகள் வழங்கி பாராட்டினர். போட்டி ஒருங்கிணைப்பாளராக கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சஞ்சீவ் செயல்பட்டார்.6வது டிவிஷன் கிரிக்கெட்இந்தியன் ஸ்போர்ட்ஸ் வெற்றிகோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019-20ம் ஆண்டுக்கான, ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டி, கோவையின் பல்வேறு கல்லுாரி மைதானத்தில் நடந்தது.பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்தது. இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் அணி, சி.டி.சி.ஏ., ஜூனியர் அணிகள் மோதின.முதலில் விளையாடிய சி.டி.சி.ஏ., அணி, 32.5 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 84 ரன் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்தியன் ஸ்போர்ட்ஸ் சி.சி., அணி, 17.1 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு, 88 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மாநில பிஸ்ட்பால் போட்டிகோவை அணி மூன்றாமிடம்தமிழ்நாடு பிஸ்ட்பால் அசோசியேஷன் சார்பில், 4வது மாநில சப்-ஜூனியர் பிஸ்ட்பால் சாம்பியன் ஷிப் போட்டி தென்காசி, வாசுதேவநல்லுாரில் நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.மாணவிகள் பிரிவில், நாமக்கல் அணி முதலிடம், காஞ்சிபுரம் அணி இரண்டாமிடம், கோவை அணி மூன்றாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.இன்ஜி., கல்லுாரி செஸ்ஸ்ரீகிருஷ்ணா டெக் முதலிடம்பொள்ளாச்சி, பி.ஏ., இன்ஜி., கல்லுாரியின் சார்பில், ஜோன்-10 இன்ஜி., கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், 11 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.* மாணவர் பிரிவில், ஸ்ரீகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணி முதலிடம், மகாலிங்கம் இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணி இரண்டாமிடம், பி.ஏ., இன்ஜி., கல்லுாரி அணி மூன்றாமிடம் பிடித்தன.* மாணவிகள் பிரிவில், மகாலிங்கம் இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணி முதலிடம், எஸ்.வி.எஸ்., கல்லுாரி அணி இரண்டாமிடம், ஸ்ரீஈஸ்வர் இன்ஜி., கல்லுாரி அணி மூன்றாமிடம் பிடித்தன.வெற்றி பெற்ற அணிகளுக்கு. கோப்பைகள் வழங்கப்பட்டன.ஜோன் -11 வாலிபால் போட்டிகுமரகுரு அணிக்கு 'கப்'சரவணம்பட்டி, கே.ஜி., ஐ.எஸ்.எல்., தொழில்நுட்ப கல்லுாரியின் சார்பில், ஜோன்-11 இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. 8 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.மூன்று, நான்காமிடத்துக்கான போட்டியில், ஜே.ஜி., ஐ.எஸ்.எல்., தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணியை வென்றது. இறுதிப்போட்டியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள் வழங்கப்பட்டன.2வது டிவிஷன் கிரிக்கெட்ஆர்.கே.எஸ்., அணி வெற்றிகோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019- 20ம் ஆண்டு, 'யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேன்சர்ஸ்' கோப்பைக்கான, இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டிகள் கோவையின் பல்வேறு மைதானத்தில் நடந்தது.பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்த போட்டியில், ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணி, விங்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணி, 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 146 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய விங்ஸ் சி.சி., அணி, 31.1 ஓவரில், 77 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணி, 69 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இன்ஜி., கல்லுாரிகளுக்கானபூப்பந்து;சி.ஐ.டி.,முதலிடம்அவிநாசி ரோடு, சி.ஐ.டி., தொழில்நுட்ப கல்லுாரியின் சார்பில், ஜோன்-9 இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான பூப்பந்து போட்டி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.போட்டியின் முடிவில், சி.ஐ.டி., கல்லுாரி அணி முதலிடம், ஸ்ரீசக்தி இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணி இரண்டாமிடம், பார்க் இன்ஜி., கல்லுாரி அணி மூன்றாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள் வழங்கப்பட்டன.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X