சலவை தொழிலாளி பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2021
01:54

வெள்ளகோவில், முத்துார் அருகே சக்கரபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 60. சலவை தொழிலாளி. திருமணமாகாதவர். நேற்று முன்தினம் இரவு 8:30 மணி அளவில் முத்துார்- காங்கயம் சாலையில் கணேசபுரம் விநாயகர் கோவில் அருகே ரோட்டில் நடந்து வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிற்காமல் சென்று விட்டது. காயமடைந்த கோவிந்தசாமி இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.லாரி மோதி ஒருவர் பலிபீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரிகா ராம், 24. திருப்பூர் அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். திருப்பூர், பி.என்., ரோடு போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அக்னி பாண்டி, 24. இருவரும் கட்டட தொழிலாளர்கள். நேற்று காலை பைக்கில் இருவரும் பெருமாநல்லுார் ரோட்டில் சென்றுகொண்டிருந்தனர்.அய்யம்பாளையம் ஏ.டி., காலனி அருகே சென்ற போது, சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதிவிட்டு, அருகில் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது. சந்திரிகா ராம், அதே இடத்தில், பலியானார். அக்னி பாண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெருமாநல்லுார் போலீசார், சரக்கு வாகன டிரைவர் விஜயகுமார், 41, என்பவரை கைது செய்தனர்.பணம், வெள்ளி பொருள் திருட்டுதிருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, மண்ணரை, சத்யா காலனியை சேர்ந்தவர் மணிகண்டன், 30. கடந்த 19ம் தேதி, சேலத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு, பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக சென்றார். பின், சேலத்தில் இருந்து 20ம் தேதி இரவு திரும்பினார். அன்றிரவு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பெற்றோர் வீட்டில் தங்கினார்.21ம் தேதி காலை, பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர், மணிகண்டனுக்கு தொடர்பு கொண்டு, வீட்டின் முன் கதவு திறந்துள்ளது என்று தகவல் அளித்தார். மணிகண்டன் சென்று பார்த்ததில், பீரோவில் இருந்த 10 ஆயிரம் ரூபாய், வெள்ளி விளக்கு உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X