அமைச்சருக்கு கைகொடுப்பரா ஆவடி மக்கள்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

30 மார்
2021
06:50
பதிவு செய்த நாள்
மார் 30,2021 06:24

ஆவடி தொகுதியில், ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர், திருவேற்காடு நகராட்சிகள், நெமிலிச்சேரி, கருணாகரச்சேரி, நடுகுத்தகை உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன.



மேலும், இங்கு திண் ஊர்தி, படை உடை தயாரிப்பு தொழிற்சாலை, மத்திய அரசு பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய விமானப்படை என, பாதுகாப்பு துறை சார்ந்த அரசு நிறுவனங்கள் உள்ளன.அவற்றில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 'சிட்டிங்' எம்.எல்.ஏ., வாக, அமைச்சர் பாண்டியராஜன் உள்ளார்.



அதனால், மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு, அவருக்கே கிடைத்துள்ளது.அதேபோன்று, கடந்த முறை தோல்வி அடைந்த, தி.மு.க.,வைச் சேர்ந்த நாசருக்கே, இந்த முறையும் வாய்ப்பு கிடைத்தது. அதனால், ஆவடி தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., இடையே, நேரடி போட்டி வலுத்துள்ளது.அவருக்கு உதவியாக, கடந்த முறை தி.மு.க., கூட்டணியில் இல்லாத ம.தி.மு.க.,, கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை, இம்முறை அக்கூட்டணியில் இணைந்துள்ளன.அ.தி.மு.க.,வில், அமைச்சர் பாண்டியராஜனின், தொடர் வெற்றியை விரும்பாத, அதிருப்தியாளர்களின், 'உள்ளடி' வேலையும் துவங்கிவிட்டது.அவர், இரண்டாவது முறை வெற்றி பெற்றால், கட்சியில் அவரது பலம் கூடிவிடும். தொகுதியை அவரிடம் இருந்து மீட்க முடியாது. தங்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என, அவர்கள் கருதுகின்றனர்.அ.தி.மு.க., கூட்டணிக்கு, பா.ஜ., மற்றும் பா.ம.க.,வின் ஓட்டுகள் கிடைத்தாலும், அவை வெற்றிக்கு உதவுமா என்பது சந்தேகம் தான். காரணம், அவற்றின் ஓட்டு வங்கி, குறிப்பிடும்படி இல்லை என்பதை, அவர்களே ஒத்துக்கொள்கின்றனர்.



மேலும், ஆவடியில் உள்ள மத்திய அரசு பாதுகாப்பு துறை தொழில் நிறுவன வேலை வாய்ப்புகளில், வடமாநிலத்தவருக்கு முன்னுரிமை, மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கையால், அந்த நிறுவனங்களில் பணியாற்றும், ஆவடி தொகுதி வாக்காளர்களின் அதிருப்தியும், ஆளும் கட்சிக்கு எதிராக அதிகரித்துள்ளது.இந்நிலையில், சிறுபான்மை சமுதாயத்தினரின் ஆதரவு, தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாகி வருவதையும் மறுக்க முடியாது. அ.ம.மு.க., கூட்டணியில் உள்ள, தே.மு.தி.க., சூழ்நிலை காரணமாக தேர்தலில் போட்டியிடுகிறதே தவிர, சொல்லும் படி ஓட்டுகள் பிரியாது. நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யமும், புதிய வாக்காளர்களின் ஓட்டுகளை பெறக்கூடிய வாய்ப்பு உருவாகி உள்ளது.இதனால், இந்த தொகுதியில் வெற்றி பெற, பாண்டியராஜன் பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டி இருப்பது நிதர்சனமான உண்மை.கோரிக்கைகளும், குறைகளும் ஆவடியில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் கிடப்பில் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது இங்கு, 10 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்கள் இன்று வரை முடியவில்லை சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்கள், ஆவடியில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் உள்ளது ஆவடி தொகுதிக்குள் உள்ள, திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூர் பேரூராட்சி, நெமிலிச்சேரி, கருணாகரச்சேரி, நடுகுத்தகை ஆகிய ஊராட்சிகளை, நிர்வாக வசதிக்காக, ஆவடி மாநகராட்சிஉடன் இணைக்க வேண்டும் மூன்று ஆண்டுகளாக தொடரும், பட்டாபிராம் சி.டி.எச்., சாலை, ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் ஆவடி, புதிய ராணுவ சாலை, ரயில்வே மேம்பாலத்தை விரிவாக்கம் செய்து, பலத்தப்படுத்த வேண்டும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை தேக்க, தனி வளாகம் அமைக்க வேண்டும் நீர்நிலைகளில், நிலத்தடி நீர் திருட்டை தடுக்க, பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து சிகிச்சைக்கான வசதிகளுடன், அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும்.சமூக ஓட்டு எவ்வளவு?வன்னியர் - 13 சதவீதம்ஆதி திராவிடர் - 23 சதவீதம்பிறர் - 64 சதவீதம்வாக்காளர் விபரம்ஆண் வாக்காளர் - 2,18,538பெண் வாக்காளர் - 2,21,369மூன்றாம் பாலினம் - 98மொத்தம் - 4,40,005

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
01-ஏப்-202111:33:45 IST Report Abuse
Malick Raja இவர் போல மனிதர்கள் இருப்பது மனித மாண்பின் இழுக்கு என்பது தெளிவு ..
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
30-மார்-202108:23:06 IST Report Abuse
Ellamman அரசியலில் எந்த அளவிற்கு கீழே செல்லமுடியும்... எவ்வளவு படித்திருந்தாலும் என்பதற்கு இந்த ஆசாமி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
30-மார்-202108:20:55 IST Report Abuse
Ellamman /// மூன்று ஆண்டுகளாக தொடரும், பட்டாபிராம் சி.டி.எச்., சாலை, ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் //// இந்த ஒரு மேம்பால வேலை இதனை ஆண்டுகளாக இழுத்துக்கொண்டு இருப்பதால்... அந்த பகுதி மக்கள் எவ்வளவு தூரம் சுற்றிக்கொண்டு தங்கள் பணி புரியும் இடத்திற்கு செல்லவேண்டி இருக்கிறது என்ற சொரணை சிறிதும் இல்லாமல் ... ஆமை வேகத்தில் வேலை நடக்கிறது... இது ஒன்று போதும்... இந்த ஆசாமியை தோற்கடிக்க.... திருநின்றவூர் மார்கத்தில் இருந்து சென்னைக்கு பேருந்துகள் எவ்வளவு சுற்றிக்கொண்டு கால மற்றும் எரிபொருள் விரயத்தை சந்தித்து செல்கின்றன என்று இந்த பாண்டிய ராஜன் அறிவாரா?? ஆவடியில்... அம்பத்தூரில் இருந்து பெரியபாளையம் மார்க்கத்தில் செல்லும் பயணிகள் எதனை கால விரயத்தை சந்திக்கின்றனர் என்று அறிவாரா??? இப்படி ஒரு கற்றுணர்ந்த ஆசாமி மக்கள் கஷ்டத்தை புரிந்துகொள்ளாமல் இருப்பது ஒரு பெரிய ஆச்சர்யம்...இந்த காரணத்திற்க்காகவே இந்த பகுதி மக்கள் இவரை தோற்கடிப்பது திண்ணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X