யாருக்கு? அதிமுக - திமுக இடையே பலத்த போட்டி.... மயிலாப்பூர் மக்களின் ஆதரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

31 மார்
2021
06:38
பதிவு செய்த நாள்
மார் 31,2021 05:59

சென்னையின் மிக பழமையான தொகுதி மயிலாப்பூர், 1952ம் ஆண்டில் இருந்தே தேர்தலை சந்தித்து வருகிறது.இதுவரை நடந்த தேர்தல்களில், காங்., இரு முறை, ஸ்தாபன காங்., ஒரு முறை, தி.மு.க., ஐந்து முறை, பா.ஜ., ஒரு முறை அ.தி.மு.க., ஆறு முறை வெற்றி பெற்றுள்ளன.



குறிப்பாக, 15 ஆண்டுகளாக, தொகுதி அ.தி.மு.க.,வசம் உள்ளது. 2016 அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ் வெற்றி பெற்று, தற்போதைய எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.தற்போது, அ.தி.மு.க.,வில், மீண்டும் நட்ராஜ் போட்டியிடுகிறார். தி.மு.க., சார்பில் வேலு, மக்கள் நீதி மய்யம் சார்பில், நடிகை ஸ்ரீபிரியா, அ.ம,மு,க., கார்த்திக், நாம் தமிழர் மகாலட்சுமி, ஆகியோர் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.ஐந்து ஆண்டுகளில், மற்ற எம்,எல்,ஏ.,க்கள் போல கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு, கட்சி பிரச்னைகளில் தலையிடாதவர்.



மக்களுக்கு, அவர் மீது தனிப்பட்ட அதிருப்தி எதுவும் இல்லை.தொகுதி நிதியை முழுமையாக செலவழித்து, பள்ளிகளுக்கு கட்டடங்கள் கட்டி கொடுத்துள்ளார்.பழமையான குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை இடித்து, புதிய வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. சாலை வசதி போன்ற, பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார்.கடந்த முறை அவரை எதிர்த்து போட்டியிட்டு மூன்று, நான்கு, ஜந்தாவது இடங்களை பிடித்த பா.ஜ., பா.ம.க., த.மா.க., கட்சிகள், தற்போது அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பிடித்துள்ளது, அவருக்கு கூடுதல் பலம்.அதே வேளையில், 2016ல், கட்சியில் எந்த பொறுப்பும் வகிக்காத நபராக, ஜெயலலிதாவின் நேரடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.ஆகையால், கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு, அவரை வெற்றி பெற வைத்தனர். இந்த முறை, மயிலாப்பூர் பகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள், ஓட்டு சேகரிப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.கூட்டணி கட்சியான, பா.ஜ.,வின் மயிலாப்பூர் பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் அருகில் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில், நடிகை குஷ்புவுக்கு தேர்தல் வேலை பார்க்க சென்று விட்டனர்.அதேபோல், பா.ம.க., நிர்வாகிகள் சேப்பாக்கம் -- திருவல்லிக்கேணியில், அக்கட்சி சார்பில் போட்டியிடும், கசாலிக்கு ஓட்டு சேகரிப்பில், ஈடுபட சென்று விட்டனர். இது அவருக்கு மைனஸ்.தி.மு.க., வேட்பாளராக, மயிலாப்பூரை சேர்ந்த, வேலு, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து, மாவட்ட பொறுப்பாளராக உயர்ந்துள்ளார்.கூட்டணி கட்சிகள் பலம் மற்றும் குடிசை பகுதியில் அவருக்கு செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது. ஆதி திராவிடர், மீனவர் நிறைந்த பகுதிகளில், ஓட்டு சேகரிப்பில் வேகம் காட்டுகிறார்.




ஆனால், 32 ஆண்டுகளில் 1989ல், அ.தி.மு.க., இரண்டாக பிரிந்து இரட்டை இலை சின்னம் இல்லாமல் இருந்த போதும், 1996ல், ஜெ., அரசின் மீது இருந்த மிகப் பெரிய அதிருப்தி காரணமாகவுமே, தி.மு.க., இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.மக்கள் நீதி மய்யம் ஸ்ரீபிரியா கணிசமான ஓட்டுகளை பெறுவார். அ.ம.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் ஓட்டுகளை பிரிப்பர். இதைப் பொறுத்து, இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.நெரிசல் தான் பிரச்னை!பிரதான சாலைகளே மிக குறுகலாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல், நடைபாதை ஆக்கிரமிப்பு, கோவில்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் வாகன நிறுத்துமிடம் பிரச்னை போன்றவை, மிகப்பெரிய பிரச்னையாக உள்ளன. கோடை காலங்களில் தண்ணீர் பிரச்னை உண்டு.சமூக ஓட்டு எவ்வளவு?வன்னியர் -- 32 சதவீதம்பிராமணர் -- 25ஆதி திராவிடர் -- 22 சதவீதம்மீனவர் -- 10 சதவீதம்பிறர் -- 11 சதவீதம்வாக்காளர் விபரம்ஆண்கள் -- 1,31,152பெண்கள் -- 1,39,344மூன்றாம் பாலினம் -- 40மொத்த வாக்காளர் -- 2,70,536

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
31-மார்-202121:58:20 IST Report Abuse
அசோக்ராஜ் விருமாண்டி நட்ராஜு ஈசியா ஜெயிப்பாரு. ஸ்ரீப்ரியா சுயேச்சையா நின்னிருந்தா கிடைக்கிற ஓட்டை விட மநீம வேட்பாளரா கம்மியாத்தான் கிடைக்கும். விண்டேஜ் ஈஸ் எ மைனஸ்.
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
31-மார்-202110:42:25 IST Report Abuse
Ellamman இந்த முறை இவர் வெற்றி பெறுவது கடினம்... நீங்களே கூறியபடி அடிமைகள் இவருக்கு எதிராக உள்ளடி வேலை செய்கிறார்கள்....
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
31-மார்-202108:42:35 IST Report Abuse
oce மைலாப்பூர் தொகுதியில் இருக்கும் கபாலீஸ்வரர் கோயில் வட தமிழகத்தில் பிரசித்தம். பிராமின் உள்ளிட்ட ஏராளமான இந்துக்கள் அந்த தொகுதியில் வசிக்கிறார்கள். கடவுளையும் வட மொழியையும் திட்டும் கட்சி அங்கே போணியாகாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X