அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2021
05:29

சென்னை - ''கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால், அனைவரும் தயக்கமின்றி ஓட்டுளிக்க வேண்டும்,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் கூறினார்.



இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னையில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், 1,061 இடங்களில், 5,911 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 28 ஆயிரத்து, 372 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இதில், 14 ஆயிரத்து, 276 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 7,095 கட்டுப்பாட்டு கருவிகள், 7,984 வி.வி.பேட் இயந்திரம் ஆகியவை, சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.ஓட்டுச்சாவடிகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இருந்து கண்காணிக்க முடியும். வாக்காளர்களுக்கு வலது கைக்கான கையுறை வழங்கப்படும். அலுவலர்களுக்கு, முக கவசம், கையுறை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.



முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணியருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், சாய்வு தளம், சக்கர நாற்காலி, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கொரோனா பரவலை தடுக்க, போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், அனைவரும் தயக்கமின்றி ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X