ஓட்டுச்சாவடிகளில் குடிநீர் | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
ஓட்டுச்சாவடிகளில் குடிநீர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஏப்
2021
22:48

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த ஓட்டுப்பதிவின்போது, பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தவில்லை என, புகார் எழுந்தது.



காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில், நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு மையங்களில், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு, போதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.ஆனால், பல ஓட்டுச்சாவடி மையங்களில், குடிநீர் ஏற்படுத்தவில்லை. இதனால், வாக்காளர்கள் சிரமப்பட்டனர். எனினும், கட்சியினர் சார்பில் மோர், குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. மகளிர் சுயஉதவி குழுவைச் சேர்ந்தோர் மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியரும் பங்கேற்றனர்.



காஞ்சிபுரம் அடுத்த, மேல்ஒட்டிவாக்கம் ஓட்டுச்சாவடி மையத்தில், பள்ளி சிறுவர்கள், ஓட்டளிக்க செல்வோருக்கு, கிருமிநாசினி மருந்து தெளித்தல், உடலில் வெப்ப அளவு அறிதல், கையுறை வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.சில ஓட்டுச்சாவடிகள் தவிர, மற்ற அனைத்திலும், பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நின்றனர். போலீசார் அறிவுறுத்தியும், யாரும் கண்டுகொள்ளவில்லை.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X