ஓட்டு போட முடியாத தன்னார்வலர்கள் | நீலகிரி செய்திகள் | Dinamalar
ஓட்டு போட முடியாத தன்னார்வலர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஏப்
2021
21:28

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஓட்டளிக்க முடியவில்லை.த



ஞ்சாவூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபைத் தொகுதிகளில், 2,886 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா, இரண்டு தன்னார்வலர்கள், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மூலம், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.



இவர்கள், பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வர அறிவுறுத்துதல், 'சானிடைசர்' மூலம் கைகளை சுத்தம் செய்து கையுறை வழங்குதல், உடல் வெப்பநிலை கண்டறிதல், முதியோருக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.



இந்நிலையில், பேராவூரணி சட்டசபைத் தொகுதியில் பணியாற்றிய தன்னார்வலர்கள் பலருக்கு, தபால் ஓட்டுகளுக்கான படிவத்தை, முறையாக அதிகாரிகள் வழங்காததால், அவர்கள் ஓட்டளிக்க முடியவில்லை.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X