அரசு மருத்துவமனைகளில் தாமதமின்றி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2021
21:30

மதுரை:இறப்பு விகிதத்தை குறைக்க, முற்றிலும் தாமதமின்றி, அவசர சிகிச்சை அளிக்கும் வார்டை, மதுரை உட்பட அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் துவக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.



மதுரை, கே.கே.நகர் வெரோனிகா மேரி தாக்கல் செய்த பொதுநல மனு:என் தாய் காணிக்கை மேரி, சுவாச பிரச்னையால், மதுரை அரசு மருத்துவமனையின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அவசர சிகிச்சை வார்டில், 2020 அக்., 20ல் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை மேற்கொள்ள தாமதமானது. மறுநாள் தாய் இறந்தார். அதே வார்டில், அடுத்தடுத்து ஏழு பேர் இறந்தனர்.



மதுரை அரசு மருத்துவ மனையில், 2020 ஜன., முதல் ஆகஸ்ட் வரை, 4 லட்சத்து, 13 ஆயிரத்து, 655 பேர், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இதில், 5,593 பேர் இறந்தனர். இக்கால கட்டத்தில், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு. அங்கு, இறப்பு விகிதத்தை குறைக்க, தாமதமின்றி சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது.



மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவை, 100 கோடி ரூபாயில், நவீன மயமாக்கும் திட்டம் நிலுவையில் உள்ளது. சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், சர்வதேச தரத்தில் சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ளன.



அக்கட்டமைப்பை, மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தவில்லை. இங்கு, 2012 - 2019 வரை, 2070 குழந்தைகள் இறந்துஉள்ளனர்.சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ளது போல், இறப்பு விகிதத்தை குறைக்க, முற்றிலும் தாமதமின்றி, விரைவாக அவசர சிகிச்சை அளிக்கும் வார்டை, மதுரை அரசு மருத்துவமனை உட்பட அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டும்.



மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவை மேம்படுத்த வேண்டும். குழந்தை களுக்கான புற்றுநோய், இதயம், ரத்தநாளம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரக பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதியை ஏற்படுத்தக் கோரி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு, 'மக்கள் நலன் கருதி, தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X