செயல்பாட்டுக்கே வரல; ஆள் இறங்கும் குழிகள் சேதம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
செயல்பாட்டுக்கே வரல; ஆள் இறங்கும் குழிகள் சேதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
00:03

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே, ஆள் இறங்கும் குழிகள் சேதமடைந்து விபத்து ஏற்படுத்தும் இடமாக மாறியுள்ளது.



பொள்ளாச்சியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 170.22 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. கடந்த, 2016ம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டம் இன்னும் முடியாமல், இழுபறியாக ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. திட்டப்பணி துவங்கிய நாள் முதல், ஆள் இறங்கும் குழிகள் தரமாக கட்டப்படுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது.



வாகனங்கள் சென்றாலே ஆள் இறங்கும் குழிகளின் மேல் மூடிகள் கீழே இறங்கி முற்றிலும் சேதமடைகின்றன. பல ஆண்டுக்கு பலன் அளிக்க கூடிய திட்டம் என கூறப்படும் சூழலில், ஆள் இறங்கும் குழிகள் தற்போதே பெயர்ந்து வருவது வேதனையான விஷயம்.பொள்ளாச்சி - பல்லடம் ரோடு விரிவாக்கப் பணிகளுக்காக ஜல்லி கற்கள் பரப்பப்பட்டுள்ளன.



அந்த ரோட்டில் கட்டப்பட்ட ஆள் இறங்கும் குழிகள் சேதமடைந்து கிடக்கின்றன. அதனை சரி செய்யாமல் உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். இதனை சரி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:திட்டப்பணிகள் துவங்கி, நான்கு ஆண்டுகள் ஆகியும் முழு அளவில் முடியாத நிலையில், ஆள் இறங்கும் குழிகள் பெயர்ந்து சேதமடைந்துள்ளன. ஆங்காங்கே ஆள் இறங்கும் குழிகள், விபத்து ஏற்படுத்தும் குழிகளாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர்.



பணிகள் முடிந்தால் போதும் என, அலட்சியம் காட்டும் அதிகாரிகளால் மக்கள் வேதனையை அனுபவிக்கும் சூழல் உள்ளது. இத்திட்டப்பணி முழு பலனை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிகாரிகள் இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X