சடங்கில் ஈடுபட்டவர்கள் மீது குளவி தாக்குதல்; காயமடைந்த 6 பேருக்கு சிகிச்சை | திருப்பூர் செய்திகள் | Dinamalar
சடங்கில் ஈடுபட்டவர்கள் மீது குளவி தாக்குதல்; காயமடைந்த 6 பேருக்கு சிகிச்சை
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
00:05

மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே கொமரலிங்கத்தில் குளவி கொட்டியதால், பாதிக்கப்பட்ட ஆறு பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.



மடத்துக்குளம் அருகே கொமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சீனி. இவர், தனது தந்தைக்கு திவசம் கொடுப்பதற்காக, நேற்று காலை கொமரலிங்கம் அமராவதி ஆற்றுப்பாலத்தின் கீழ், தனது குடும்பத்தினருடன் சடங்குகளில் ஈடுபட்டிருந்தார். சடங்குகளினால் ஏற்பட்ட புகையும், அங்கிருந்தவர்களின் செயல்பாடுகளும், அருகே புதரில் இருந்த குளவிக் கூட்டை கலைத்தது.இதனால், நுாற்றுக்கும் மேற்பட்ட குளவிகள் புதரிலிருந்து வெளியாகி, அந்த பகுதியைச் சூழ்ந்து அங்கிருந்தவர்களை கடித்தன.இதனால், திவசம் கொடுக்க வந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு பாலத்தின் மேற்பகுதிக்கு ஓடி வந்தனர்.



உடனடியாக அங்கிருந்தவர்கள், வாகனத்தை ஏற்பாடு செய்து, உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது ஆறு நபர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.



இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கொமரலிங்கம் ஆற்றுப்பாலத்தின் கீழ், அமராவதி ஆற்றங்கரை ஓரம் திவசம் கொடுக்கும் சடங்கு, பல தலை முறையாக நடக்கிறது. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து இங்கு வந்து திவசம் கொடுக்கின்றனர்.ஆனால், இந்தப்பகுதி போதிய அளவு பராமரிக்கப்படுவதில்லை. குளவிக்கூடுகள் புதர்கள் அதிகளவில் உள்ளன. சில நேரம் இது போல அசம்பாவிதம் ஏற்படுகிறது. இதற்குத்தீர்வாக இந்த பகுதியை சுத்தம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X