குறுகலான கணியூர் - கடத்தூர் ரோடு; அகலப்படுத்தினால் பயணம் எளிதாகும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
00:05

மடத்துக்குளம் : மடத்துக்குளம் தாலுகா கணியூர்- - கடத்துார் ரோட்டை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



கணியூர் -- கடத்தூர் ரோடு, 3 கி.மீ., நீளத்தில் அமைந்துள்ளது. கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய வாகன போக்குவரத்தை கணக்கீடு செய்து இந்த ரோடு அமைக்கப்பட்டது. பல ஆண்டுகள் கடந்து, தற்போது வாகனப்போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், இதற்கு தகுந்த அகலத்தில் ரோடு இல்லை.



கனரக வாகனங்கள் அதிக அளவில் இந்த ரோட்டில் செல்கின்றன. இதனால் வாகனங்கள் விலகிச்செல்ல முடியாத அளவில், ரோடு குறுகலாக உள்ளது. இந்த ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடத்துார் சுற்றுப்பகுதியில், பலவித தொழில்கள் நடக்கின்றன. இதற்கான மூலப்பொருள்களை எடுத்து வரவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனைக்கு எடுத்துச்செல்லவும், கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.



இதில், 80 சதவீத வாகனங்கள், கணியூர் -- கடத்தூர் ரோட்டை பயன்படுத்துகின்றன. இது தவிர, அரசு மற்றும் இதர பஸ்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் எதிரெதிராக வரும்போதும், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் வரும் போதும் விலகிச் செல்ல இடமின்றி ரோடு குறுகலாக உள்ளது.இதற்குத்தீர்வாக இந்த ரோட்டை அகலப்படுத்த பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X