‛ கால் அழுகிய மன நோயாளி மீட்பு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
‛ கால் அழுகிய மன நோயாளி மீட்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
00:11

ராமநாதபுரம் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கால் அழுகிய நிலையில் சிகிச்சைக்கு வழியின்றி ரோட்டோரம் தவித்த மன நோயாளியை தொண்டு நிறுவனத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.



ராமநாதபுரம் கேணிக்கரை பஸ்ஸ்டாப் அருகே 45 வயதுள்ள ஆண் மன நோயாளி ஒருவர் ஒரு மாதத்திற்கும் மேலாக ரோட்டோரம் படுத்திருந்தார். அவரது வலது கால் பாதம் புண்பட்டு அழுகியதால்ஈக்கள் மொய்த்த நிலையில் மருத்துவ சிகிச்சையின்றி பரிதாபமாக கிடந்தார்.இவருக்கு ராமநாதபுரம் ஞான தீப சங்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோகுல், முனீஸ்வரன் ஆகியோர் மூன்று வேளை உணவளித்து வந்தனர். அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்பது குறித்து தினமலர் நாளிதழில் ஏப்.6ல் செய்தி வெளியானது.



இதனை பார்த்த சென்னை கருணை உள்ளங்கள் அறக்கட்டளையின் தன்னார்வலரான பரமக்குடியை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் தங்க நந்தகுமார் 22, அவருக்கு உதவி செய்ய முன்வந்தார். இதுகுறித்து கேணிக்கரை போலீசாருக்கு தெரிவித்தவர், போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் 108 சேவை உதவியுடன் நேற்று காலை மன நோயாளியை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.அவருக்கு மேல் சிகிச்சையும் பராமரிப்பும் தேவைப்பட்டதால் திண்டுக்கல் கொடை ரோட்டில் உள்ள புனித ஜோசப் கருணை இல்லத்தில் அனுமதித்து பராமரிப்பு, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.



இதையடுத்து போலீஸ் மெமோ அளிக்கப்பட்டு ராமநாதபுரம் ஞானதீப சேவா சங்கத்தின் ஆம்புலன்சில் சேவா சங்கத்தின் தன்னார்வலர் கோகுல் மன நோயாளியை திண்டுக்கல் புனித ஜோசப் கருணை இல்லத்தில் அனுமதித்தனர்.--

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X