வெப்பம் தணிக்கும் நுங்கு விற்பனையோ வெகு ஜோர்! | திருப்பூர் செய்திகள் | Dinamalar
வெப்பம் தணிக்கும் நுங்கு விற்பனையோ வெகு ஜோர்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
00:13

உடுமலை : வெப்பம் தணிக்க உதவும், நுங்கு, பதநீர், மாநில எல்லை கிராமங்களில் இருந்து தருவிக்கப்பட்டு, உடுமலை பகுதியில், விற்பனை செய்யப்படுகிறது.



உடுமலை சுற்றுப்பகுதிகளில், பல்வேறு பயன்கள் தரும், பனை மரங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கோடை காலத்தில், பல்வேறு நன்மைகள் தரும், பனை மரத்திலிருந்து பெறப்படும் பொருட்களுக்கு, தட்டுப்பாடு ஏற்படுகிறது.இதனால், பிற பகுதிகளில் இருந்து, உடுமலை பகுதிக்கு, நுங்கு, பதநீர், பனங்கருப்பட்டி உட்பட பொருட்களை சிறு வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.



கோடை வெயில், முன்னதாகவே துவங்கி, கொளுத்தி வருவதால், உடல் சூட்டையும், வெப்பத்தையும், தணிக்க, நுங்கு உட்பட பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. இதற்காக, பொள்ளாச்சி அருகே, தமிழக - கேரள எல்லை கிராமங்களிலுள்ள, பனை மரங்களில், இருந்து, நுங்கு உட்பட பொருட்கள் உடுமலைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.இதில், நுங்கு, 8 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. பதநீர் விற்பனையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X